தெலங்கானாவில் நகைக்கடையில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்தனர்.
தெலங்கானா மாநிலம், கரீம்நகர் நகரில் உள்ள நகைக்கடையில், அடையாளம் தெரியாத நபர்கள் ஞாயிற்றுக்கிழமை ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 4 ஊழியர்கள் காயமடைந்தனர். பின்னர், அவர்கள் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்த நகைக்கடையை மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் பார்வையிட்டார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாடிக்கையாளர்கள் போல் நடித்து ஐந்து பேர் நகைக்கடைக்குள் நுழைந்துள்ளனர்.
முதலில், ஒருவர் கடைக்குள் சென்று 20 கிராம் தங்கச் சங்கிலி கேட்டுள்ளார். பின்னர், தங்க நகைகள் வாங்க விரும்புவதாகக் கூறி மேலும் இருவர் உள்ளே நுழைந்தனர். பின்னர், மேலும் இருவர் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். ஆயுதங்களைக் காட்டி மிரட்டி ஊழியர்களை முழங்காலிடச் செய்து, நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றனர்.
தடுக்க முயன்றபோது, ஊழியர்கள் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் விற்பனை மேலாளர் உள்பட நான்கு ஊழியர்கள காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கில் பேசியதாகவும், கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸ் குழுக்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவ்வாறு குறிப்பிட்டார்.
சம்பவம் நடப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் நகைக்கடைக்கு அருகே நடைபெற்ற வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்றார்.
Summary
Four employees of a jewellery showroom in Karimnagar city of Telangana were injured after unidentified men opened fire on them on Sunday and allegedly escaped with gold ornaments, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லக்னௌ பயிற்சி நிறுவனத்தில் தீ விபத்து: 14 பேர் பலி

தில்லியில் 3 பேர் பலியான துக்ளகாபாத் குடியிருப்பு தீ விபத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தில்லி தீ விபத்தில் பலி 21 ஆக உயர்வு! என்ன நடந்தது?
தில்லி உணவகத்தில் தீ விபத்து: 21 பேர் பலி; மேலும் சிலர் கவலைக்கிடம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




