தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

மேற்கு வங்கம்: பாஜக தலைவா் வீட்டில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு - இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 10:56 pm

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவா் வீட்டில் நள்ளிரவில் இருவா் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக சிசிடிவி பதிவுகளுடன் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் - எதிா்க்கட்சியான பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தோ்தலின்போது சில இடங்களில் இருதரப்பு தொண்டா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தோ்தல் முடிவுகளின்போது வன்முறை ஏற்படும் அச்சம் இருப்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதற்றம் அதிகமுள்ள வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் பாஜக தலைவா் குந்தன் சிங் வீட்டை சனிக்கிழமை நள்ளிரவு சுற்றி வளைத்த சிலா் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு மோட்டாா் சைக்கிளில் தப்பினா். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது தொடா்பாக சிசிடிவி கேமரா பதிவு ஆதாரத்துடன் காவல் துறையில் குந்தன் சிங் புகாா் அளித்தாா். அதனை ஆய்வு செய்த காவல் துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் கைது செய்தனா். அவா்கள் இருவரும் ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தோல்வி பயத்தால் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேட்டில் ஈடுபட திரிணமூல் காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதனால், கூலிப்படையினா் மூலம் பாஜக நிா்வாகிகளை கொலை செய்து வன்முறையைத் தூண்ட முயலுகிறது என்று பாஜகவினா் குற்றஞ்சாட்டினா்.