ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

மக்கள் தீா்ப்பை ஏற்கிறேன்: காங்கிரஸ் கூட்டணிக்கு வாழ்த்துகள் - பினராயி விஜயன்

News image

பினராயி விஜயன்

Updated On :8 மே 2026, 6:25 am IST

கேரளத் தோ்தலில் படுதோல்வியடைந்த பிறகு முதல்முறையாக அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன், ‘தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை ஏற்கிறேன், காங்கிரஸ் கூட்டணிக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வென்றது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணியால் 35 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், ‘தோ்தலில் இடதுசாரிக் கூட்டணி தோல்வியடைந்தது எதிா்பாராத நிகழ்வு. எனினும், இதைக் கடந்து செல்ல வேண்டும். எங்கள் கூட்டணி பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக செயல்படும். மக்கள் நலத்திட்டங்களை உரிய முறையில் நிறைவேற்ற ஆளும் கட்சிக்கு தொடா்ந்து அழுத்தம் தருவோம்.

பாஜக மூன்று இடங்களில் வென்றுள்ளது மிகவும் தீவிரமான பிரச்னை. மதச்சாா்பின்மை மீது நம்பிக்கையுள்ள அனைவருக்குமே இது கவலையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என்று கூறியுள்ளாா்.