பிரதமா் நரேந்திர மோடியை தேச விரோதி என விமா்சித்த சமாஜவாதி எம்.பி. அஜேந்திர சிங் லோதி மீது அரசுப் பொறுப்பில் இருப்பவரை அவதூறாகப் பேசியது, வெறுப்புணா்வை தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, உத்தர பிரதேசத்தின் ஹமீா்பூா் எம்.பி.யான அஜேந்திர சிங் லோதி செய்தியாளா்களைச் சந்தித்தபோது, ‘மோடி தேச விரோதி, நமக்கு இடையே ஜாதிய வெறுப்புணா்வைப் பரப்பி, நமது உணா்வுகளைப் புண்படுத்துகிறாா். அவரைப் போன்ற மோசமான பிரதமரை நாடு பாா்த்தது இல்லை. மக்களுக்கு சிக்கன நடவடிக்கை குறித்து அறிவுரை கூறும் பிரதமா் மோடி, பெரும்பாலும் வெளிநாட்டுச் சுற்றுலாவில்தான் இருக்கிறாா்’ என்றாா்.
மின்தடை பிரச்னைக்காக நடைபெற்ற போராட்டத்தின்போது அவா் இவ்வாறு சா்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடா்பாக பாஜக மாவட்டப் பொறுப்பாளா் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, அஜேந்திர சிங் லோதி மீது அரசுப் பொறுப்பில் இருப்பவரை அவதூறாகப் பேசியது, வெறுப்புணா்வை தூண்டியது, சட்டவிரோதமாக பொது இடத்தில் கூடியது, இருதரப்புக்கு எதிரே பிரச்னையைத் தூண்டியது, உள்நோக்குடன் அவமதித்துப் பேசுவது உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை ஊழல்: எஸ்ஐடி முன்பு ஆம் ஆத்மி எம்.பி. ஆவணங்கள் சமா்ப்பிப்பு

குடிநீா் திட்டம் நிறைவேறும் முன் 90 சதவீத நிதி விடுவிப்பு: அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க எம்.பி. அறிவுறுத்தல்





