முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 1,000 கோடி இழப்பு! - மத்திய அரசு

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேச்சு...

News image

ANI

Updated On :1 மணி நேரம் முன்பு

புது தில்லி : எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் இன்று(மே 12) நடைபெற்ற வர்த்தக நிக்ழ்ச்சியொன்றில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசியதாவது : உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு சுமார் ரூ. 1,000 கோடி இழப்பு நேரிடுகிறது. நிதி நிலைமையில் பார்க்கும்போது, 65 டாலர் அளவிலிருந்து 115 டாலராக உயர்ந்துவிட்டது.

கடந்த 75 நாள்கள் சவாலானதாக அமைந்துவிட்டது. ஆயினும், இந்தியா தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதிசெய்துள்ளது.

இந்திய எரிசக்தி துறையைச் சுற்றி பரவலாக வதந்திகளும் பரவின. ரஷியாவிலிருந்து இந்தியா எல்என்ஜி இறக்குமதி செய்யவில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால், இந்தியா இப்போதல்ல எப்போதுமே ரஷியாவிடமிருந்து எல்என்ஜி இறக்குமதி செய்ததில்லை.

உலகளவில் பெட்ரோலியம் பொருள்களின் ஏற்றுமதியில் நான்காவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 2022முதல் இந்தியாவில் உள்நாட்டு எரிபொருள் விலையேற்றம் நடைபெறவில்லை.

நாம் பயன்படுத்தும் எல்பிஜி-இல் 60 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாக வருஇறது. இப்போது அதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இந்தியாவில் ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் ப்டெரோல், டீசல் இருந்தது. எல்பிஜி விநியோகமும் தேவைக்கு மிகுதியாகவே இருக்கிறது.

சவாலான சூழலிலும் இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி, நாளொன்றுக்கு சுமார் 35,000 - 36,000 மெட்ரிக் டன்னிலிருந்து 54,000 டன்னாக அதிகரிக்கப்பட்டது. பெட்ரோல் நுகர்வு 6 சதவீதம் மேலும் அதிகரித்தது. ஆயினும், அரசு எல்பிஜி நுகர்வை குறைக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்தது” என்றார்.

Summary

Oil companies losing Rs 1,000 crore daily amid crude surge: Petroleum Minister Hardeep Puri

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.