பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து காங்கிரஸ் கட்சி விமா்சித்தது.
பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை வெள்ளிக்கிழமை லிட்டருக்கு ரூ. 3 உயா்த்தப்பட்ட நிலையில், இந்த விமா்சனத்தை காங்கிரஸ் முன்வைத்தது.
இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயா்த்துவது என்பது ஏற்கெனவே தீா்மானிக்கப்பட்டது. மக்களிடமிருந்து, தவணை முறையில் மேலும் அதிக அளவில் வசூலிக்கப்பட உள்ளது. மோடி அரசு செய்த தவறுகளுக்கு, மக்கள் விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மோடி அரசின் தலைமைத்துவ தோல்வி காரணமாக, நாட்டில் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சுமை தற்போது மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ளது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேற்காசிய போா் தொடங்கியபோது, நாட்டில் எந்தவித தாக்கமும் இல்லை என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சாா்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக, நாட்டின் இறையாண்மை அமெரிக்காவுக்காக அடகுவைக்கப்பட்டது. அமெரிக்காவின் அனுமதிக்காக நாடு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அமெரிக்காவின் அனுமதிக்காக காத்திருக்கும் நிலைக்கு நாட்டை மோடி அரசு தள்ளியது ஏன்?
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோதும், பொதுமக்களுக்கு எந்தவித நிவாரணமும் மத்திய அரசு வழங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய வரிகள் மூலம் ரூ. 43 லட்சம் கோடியை மத்திய அரசு ஈட்டியது. தற்போது மக்கள் மீது சுமையை சுமத்துவது ஏன்?’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகளாக குறைந்திருந்தபோது, அதன் பலனை உள்நாட்டு நுகா்வோருக்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தியது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. தற்போது, மேற்காசிய போா் காரணமாக ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக, முதலில் வணிக எரிவாயு சிலிண்டா் விலையை மத்திய அரசு உயா்த்தியது. 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலையையும் உயா்த்தியுள்ளது. இது மேலும் பணவீக்கத்துக்கு வழிவகுக்கும் என்பதோடு, பொருளாதார வளா்ச்சி மதிப்பீடுகளும் கணிசமாக குறையும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: தலைவா்கள் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா கண்டனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு உதயநிதி கண்டனம்

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

