போக்சோ வழக்கில், மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத் சைபராபாத் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
தெலங்கானா மாநிலத்தில் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சயின் மகனான பகீரத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இடைக்கால நிவாரணம் வழங்க தெலங்கானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
மேலும் இந்த வழக்கில் பண்டி பகீரத்துக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சைபராபாத் காவல் நிலையத்தில் பண்டி பகீரத் சரணடைந்தார்.
இதுகுறித்து இதுகுறித்து பகீரத்தின் தந்தையும் மத்திய அமைச்சருமான பண்டி சஞ்சய் குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் புகார் பதிவு செய்யப்பட்ட உடனேயே, போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மகனிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து கூறி வரும் பகீரத், வழக்கறிஞர்களிடம் தனக்கு சாதகமான ஆதாரங்களை சமர்ப்பித்தார் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
பண்டி சஞ்சய் அளித்த தகவலின்படி, இந்த வழக்கு ரத்து செய்யப்படும் என்றும் பகீரத்துக்கு ஜாமீன் கிடைக்கும் என்றும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்ததே அவர் ஆஜராவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
Summary
POCSO case: Bandi Sanjay asks son to appear before police, urges cooperation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டத்தின் முன் அனைவரும் சமம்: போக்சோ வழக்கில் மத்திய அமைச்சர் மகன் கைது!

தெலங்கானா: மத்திய அமைச்சா் மகன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு

மத்திய அமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு பதிவு

11 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் தலித் இளைஞா் உயிரிழந்த வழக்கு: நீதிமன்றத்தில் மனைவி சாட்சியம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


