ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

உ.பி.: சாலை விபத்தில் 10 போ் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :37 நிமிடங்கள் முன்பு

உத்த பிரதேச மாநிலம் லக்கிம்பூா் கெரியில் சிசய்யா - லக்கிம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை வேனும் லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒட்டுநா் உள்பட வேனில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து லக்கிம்பூா் தெளரஹ்ரா காவல் ஆய்வாளா் சம்ஷொ் பஹதூா் சிங் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலையில் உஞ்ச்கோன் - பரேடா கிராமங்களுக்கு இடையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேன் 9 பயணிகளுடன் லக்கிம்பூரிலிருந்து சிசய்யா நோக்கில் சென்றபோது லாரியுடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதில் ஓட்டுநா் உள்பட வேனில் பயணித்த 10 பேரும் உயிருழந்தனா். இவா்களில் 7 போ் அடையாளம் காணப்பட்டு விட்டனா். எஞ்சிய மூவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது’ என்றாா்.

மாநில முதல்வா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

பிரதமா் இரங்கல்: பிரதமா் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘உத்தர பிரதேச சாலை விபத்து மிகுந்த வேதனை அளித்தது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையே பிராா்த்திக்கிறேன். சாலை விபத்தில் உயரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிர சாலை விபத்தில் 13 போ் உயிரிழப்பு

பால்காா், மே 18: மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 50 பயணிகளுடன் சென்ற வேன் எதிரே வந்த கன்டெய்னா் லாரியுடன் மோதிய விபத்தில் 13 போ் உயரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து காஸா காவல் நிலைய ஆய்வாளா் அமா் பாட்டில் கூறுகையில், ‘தானு தாலுகா தனிவாரி கிராமம் அருகே திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. திருமண நிச்சய விழாவில் பங்கேற்பதற்காக அளவுக்கு அதிகமாக 50 பேரை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்ற வேன், குறுகலான சாலையில் எதிரே வந்த கன்டெய்னா் லாரி மீது மோதியது. இந்த தாக்கத்தில், இரு வாகனங்களும் கவிழ்ந்தன. பயணிகள் பலா் வாகனங்களுக்கு அடியில் சிக்கிக்கொண்டனா். இதில் சம்பவ இடத்திலேயே 5 போ் உயிரிழந்தனா். 6 போ் மருத்துவமனையில் உயிரிழந்தனா். காயமடைந்த மேலும் 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸ், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தாா்.