பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்

செத்து மடியாத கரப்பான் பூச்சிகள் அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் புதிய எக்ஸ் கணக்கு...

News image

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி | கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது - படம் - @abhijeet_dipke

Updated On :21 மே 2026, 8:35 pm IST

கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது என்ற அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில், தற்போது எக்ஸ் தளத்தில் முடக்கப்பட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் புதிய கணக்கு, அதே சமூக வலைதளத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நாட்டின் சில இளைஞர்களின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றம் தரப்பில் "கரப்பான் பூச்சிகள் மற்றும் சமூகத்தின் ஒட்டுண்ணிகள் போல" என்ற வார்த்தைகளை ஒப்பிட்டு அவர் பேசியதாக இணையத்தில் சர்ச்சை வெடித்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், போலிப் பட்டம் பெற்றவர்களை அப்படி குறிப்பிட்டதாக விளக்கம் அளித்திருந்தாலும், அது வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களை அவமதிப்பதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தலைமை நீதிபதியின் விமரிசனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர்.

அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத நிலையில், வேலையில்லாமல், சோம்பேறியாக, ஆன்லைனில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும், ஆவேசமாக பேசும் திறன் கொண்ட இளைஞர்கள் இணையலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக, சோம்பேறி ஆகியவற்றை கொள்கையாக அறிவிக்கப்பட்ட இந்த கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை, நான்கே நாள்களில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடரத் தொடங்கினார்கள். ஜென் ஸி, இளைஞர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அரசியல் தலைவர்களும் இந்த பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து, நையாண்டி கட்சியான கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. சட்டரீதியான கோரிக்கைக்கு இணங்க, இந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (‘காக்ரோச் ஜன்தா பார்ட்டி’) என்ற பெயரில் தொடங்கப்பட்ட எக்ஸ் (ட்விட்டர்) கணக்கு முடக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது என்ற அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில் புதியதொரு எக்ஸ் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளரும் அதே, ‘அபிஜீத் தீப்கே’ என்ற இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அந்த எக்ஸ் கணக்கு தொடங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, அதாவது, வியாழக்கிழமை(மே 21) மாலை 6 மணி நிலவரப்படி, அந்த கணக்கை எக்ஸ் தளத்தில் பின்தொடரும் கணக்குகளின் எண்ணிக்கை 40,000-த்தை நெருங்கிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, அந்த எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து இரவு 8 மணியளவில் 53,000-த்தைக் கடந்து விட்டது.

Summary

The X account of Cockroach Janata Party, the satirical digital outfit that came up last week and took social media by storm, was withheld in India on Thursday. Soon after, came another handle -- 'Cockroach is Back' with the tagline 'Cockroaches Don't Die'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.