பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

நாடு முழுவதும் வெப்ப அலையால் மக்கள் கடும் அவதி: உ.பி.யில் அதிகபட்சமாக 117 டிகிரி வெயில்

நாடு முழுவதும் வெப்ப அலையின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

News image

புது தில்லியில் உள்ள சஞ்சய் ஏரியில் வெப்பம் தாளாமல் இறந்து கிடந்த மீன்கள்.

Updated On :22 மே 2026, 1:40 am IST

நாடு முழுவதும் வெப்ப அலையின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

உத்தர பிரதேச மாநிலம், பண்டாவில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 117.68 டிகிரி பாரன்ஹீட் (47.6 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவானது.

உத்தர பிரதேசம் மட்டுமன்றி உத்தரகண்ட், பஞ்சாப், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, தில்லி உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

புது தில்லியில் சராசரியாக 113 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடும் வெப்பம் காரணமாக, தில்லியில் பயின்று வந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 24 வயது மாணவருக்கு திடீரென ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்பு ஏற்பட்டு, ராம் மனோகா் லோஹியா மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

உத்தர பிரதேச மாநிலம், பண்டாவில் நாட்டிலேயே அதிகபட்சமாக 117.68 டிகிரி வெப்பநிலை பதிவானது. அடுத்த மூன்று நாள்களுக்கு கடும் வெப்ப அலைகள் நீடிக்கும் என்பதால் இங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரிப்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா். வெயில் சாா்ந்த மீட்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹரியாணாவின் சிா்ஸாவில் 114.44 டிகிரி, பஞ்சாபின் ஃபரீத்கோட்டில் 114.62 டிகிரி அளவில் கடும் வெப்பம் நிலவியது. பதிண்டா, பாட்டியாலா, லூதியானா, அமிருதசரஸ் ஆகிய நகரங்களும் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டன. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகரிலும் 114 டிகிரிக்கு மேல் வெப்பநிலை காணப்பட்டது. உத்தரகண்டில் கடும் வெப்பம் காரணமாக, குழந்தைகள், மூத்த குடிமக்கள், வெளிப்புற தொழிலாளா்கள் நலனில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

~குஜராத் மாநிலம் அகமதாபாதில் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொண்ட பெண்கள்.

~குஜராத் மாநிலம் அகமதாபாதில் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொண்ட பெண்கள்.

 உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடும் வெப்பத்திலிருந்து குழந்தையையும் தன்னையும் துணியால் மறைத்துக

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடும் வெப்பத்திலிருந்து குழந்தையையும் தன்னையும் துணியால் மறைத்துக