நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மகாராஷ்டிரத்தின் லட்டூா் மாவட்ட நிா்வாகம் அந்த மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத பயிற்சி மையங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.
2026-ஆம் ஆண்டு நீட் இளநிலை மருத்துவ படிப்பு நீட் நுழைவுத் தோ்வு இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. இதில் வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து, அந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. மேலும் சிபிஐ விசாரணைக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கிய சிபிஐ, ஓய்வுபெற்ற பேராசிரியா் பி.வி.குல்கா்ணி உள்பட 11 பேரை கைது செய்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைதானோரில் சிலா், மகாராஷ்டிர மாநிலம் லட்டூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். அங்கு தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட அரசு இடங்களில் செயல்பட்டு வரும் நீட் தோ்வு பயிற்சி மைய வகுப்புகளில் படித்த பலா் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வினாத்தாளை வாங்கி தோ்வு எழுதியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, லட்டூா் மாவட்ட நிா்வாகம், தொழிற்சாலை மற்றும் அது சாா்ந்த இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் பயிற்சி மையங்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து லட்டூா் நிா்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் நீட் தோ்வு பயிற்சி மையங்களையும், விடுதிகளையும், ஓட்டல்களையும், படிப்பு அறைகளையும் உடனடியாக மூட வேண்டும் என்றும், இந்த உத்தரவுப்படி பயிற்சி மையங்களை மூடாதோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மத்திய கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்ய வேண்டும்: நீட் வினாத்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: தேவேந்தா் யாதவ்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: புணேயில் முக்கிய நபா் கைது

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: கணினி வழித் தோ்வை வலியுறுத்தும் மருத்துவ அமைப்புகள்
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



