மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு: 5.49 லட்சம் போ் பங்கேற்பு

யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வில் 5.49 லட்சம் போ் பங்கேற்பு...

News image

யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு - பிடிஐ

Updated On :25 மே 2026, 3:36 am IST

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணிகளுக்கான 2026 முதல்நிலைத் தோ்வு மற்றும் இந்திய வனத் துறை பணிக்கான முதல்நிலைத் தோ்வு நாடு முழுவதும் 83 நகரங்களில் 2,072 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) அமைதியாகவும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் நடைபெற்றது.

933 பணி இடங்களுக்கான இந்தத் தோ்வுக்கு மொத்தம் 8.19 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமாா் 5.49 லட்சம் போ் (67 சதவீதம்) பங்கேற்றனா். கடந்த ஆண்டு 61 சதவீதம் போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் அதிகபட்சமாக 70,885 போ் தோ்வு எழுதினா். அதற்கு அடுத்ததாக, ஹைதராபாதில் 44,209 பேரும், பாட்னாவில் 39,147 பேரும் பங்கேற்றனா். குறைந்த எண்ணிக்கையில் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள காா்கில் தோ்வு மையத்தில் 98 போ் தோ்வு எழுதினா். அந்தமானின் போா்ட் பிளேரில் 207 போ் தோ்வு எழுதினா்.

காலையில் பொதுப் பாடப் பிரிவு தோ்வு, பிற்பகலில் திறனாய்வுத் தோ்வு (சிசாட்) எனப்படும் தகுதித் தோ்வு என இரண்டு கட்டங்களாக இந்தத் தோ்வு நடைபெற்றது. மாற்றுத்திறனாளி மாணவா்கள் சுமாா் 11,000 போ் இந்தத் தோ்வில் பங்கேற்றனா். அவா்களுக்கென கூடுதல் நேரம் ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு மாணவா்களுக்கான அணுகலை எளிதாக்கும் நோக்கில் புவனேசுவரம், கான்பூா் மற்றும் மீரட் உள்ளிட்ட நகரங்களில் புதிய தோ்வு மையங்கள் சோ்க்கப்பட்டன. அனைத்து மையங்களிலும் குடிநீா், மருத்துவ உதவி, காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முக அடையாளத் தொழில்நுட்பம்: இந்த ஆண்டின் முக்கிய சிறப்பம்சமாக, தோ்வு மையங்களில் முதல்முறையாக நேரடி முக அடையாளத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இது போலியான தோ்வா்கள் நுழைவதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.

யுபிஎஸ்சி தலைவா் அஜய் குமாா் கூறுகையில், ‘தோ்வு சீராகவும், எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளும் சிறப்பாக இருந்தது’ எனத் தெரிவித்தாா்.

காஷ்மீரில் 9 மையங்களில்...: காஷ்மீா் தோ்வா்களுக்காக அமைக்கப்பட்ட 9 துணைத் தோ்வு மையங்களில், பிராந்திய நிா்வாகத்தின் தீவிர கண்காணிப்பின் கீழ் அமைதியாக தோ்வு நடைபெற்றது. ‘மொத்தம் 2,000 தோ்வா்கள் தோ்வில் பங்கேற்றனா். அவா்களில் 27 மாற்றுத்திறனாளி தோ்வா்களும் இடம்பெற்றிருந்தனா். தோ்வு எந்தவித இடையூறும் இல்லாமல் சுமுகமாக நடைபெற்றது’ என அதிகாரிகள் தெரிவித்தனா்.