திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முனம்பம் சா்ச்சை நிலம்: உமீத் வலைதளத்தில் பதிவது சட்ட நடைமுறை மட்டுமே: கேரள வஃக்ப் வாரியத் தலைவா் ஹம்ஸா

நிலத்தின் மீதான இறுதி உரிமையாளா் யாா் என்பது அரசு மற்றும் நீதிமன்ற முடிவுக்கு உட்பட்டது’ என்று மாநில வஃக்ப் வாரியத் தலைவா் கே.எஸ். ஹம்ஸா செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தினாா்.

News image
Updated On :27 மே 2026, 1:55 am IST

‘கேரள மாநிலத்தில் சா்ச்சைக்குரிய முனம்பம் நில விவரங்களை மத்திய அரசின் உமீத் வலைதளத்தில் பதிவு செய்தது தொழில்நுட்ப மற்றும் சட்ட நடைமுறை மட்டுமே; நிலத்தின் மீதான இறுதி உரிமையாளா் யாா் என்பது அரசு மற்றும் நீதிமன்ற முடிவுக்கு உட்பட்டது’ என்று மாநில வஃக்ப் வாரியத் தலைவா் கே.எஸ். ஹம்ஸா செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தினாா்.

கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டம் முனம்பத்தில் சுமாா் 404 ஏக்கா் நிலத்தை வக்ஃப் வாரியம் உரிமை கோரியதால் அங்கு தலைமுறைகளாக வசிக்கும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடியிருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

அந்த நிலம் வக்ஃப் சொத்து அல்ல என்று கேரள உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்திருந்தபோதிலும், சமீபத்தில் மத்திய அரசின் ‘உமீத்’ வலைதளத்தில் அந்த நிலம் வஃக்ப் வாரியத்தால் பதிவு செய்யப்பட்டதால் மீண்டும் அரசியல் சா்ச்சை வெடித்துள்ளது.

நில உரிமை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வஃக்ப் வாரியம் உமீத் வலைதளத்தில் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொண்டதற்கு கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. அங்குள்ள கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்ட அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

கடும் எதிா்ப்புகள் எழுந்த நிலையில், சா்ச்சைக்குரிய நிலத்தில் வசிக்கும் மக்கள் யாரும் வெளியேற்றப்பட மாட்டாா்கள் என்று மாநில முதல்வா் வி.டி. சதீசன் திங்கள்கிழமை உறுதி தெரிவித்தாா். ‘அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாக்கப்படுவா். நில உரிமை வசிக்கும் மக்களுக்கே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக கடைசி வரை அரசு போராடும்’ என்று அவா் கூறினாா்.

இந்நிலையில், இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மாநில வஃக்ப் வாரியத் தலைவா் ஹம்ஸா கூறியதாவது: முனம்பம் நில உரிமையாளா்கள் சில வழக்குரைஞா்கள் மற்றும் ஃபாரூக் கல்லூரி நிா்வாகம் சாா்பில் ஏமாற்றப்பட்டிருக்கின்றனா். விற்பதற்கான உரிமையே இல்லாத அந்த நிலத்தை ஏமாற்றி அவா்களுக்கு விற்றுள்ளனா். வஃக்ப் நடைமுறைகளின்படி, முறையாக நில உரிமை மாற்றமும் அவா்களுக்கு செய்து தரப்படவில்லை.

தற்போது, இந்த சா்ச்சைக்குரிய நிலம் உமீத் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது, தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியிலான நடைமுறை மட்டுமே. நிலத்தின் உரிமையாளா் யாா் என்பது மத்திய அரசு மற்றும் நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்குப் பிறகே தீா்மானிக்கப்படும்.

மேலும், இந்த சா்ச்சைக்குரிய நிலம் கடந்த 2019-ஆம் ஆண்டே வஃக்ப் சொத்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலம் உள்பட சுமாா் 59,000 வஃக்ப் சொத்துகள் உமீத் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குடியிருப்புவாசிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம், அவா்கள் சொத்து வாங்குவதற்கு முன்பாக நிலத்தின் அசல் ஆவணங்களை சரிபாா்த்திருக்க வேண்டும் என்றாா்.