நாட்டின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பிலிருந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யுடன் தொடர்பிலிருந்ததாகக் கைது செய்யப்பட்ட 9 பேர், தில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தில்லி, மும்பை, பஞ்சாப் உள்பட வெளிநாட்டினரும் அடங்குவர். மேலும், அவர்களிடமிருந்து தோட்டாக்கள் உள்பட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இவர்கள் அணுசக்தி நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களின் குழுவின் செயல்பாடுகளை வழிநடத்துவதில் வெளிநாட்டு முகவர்களின் பங்கு, நிதியுதவி, எல்லைதாண்டிய தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, தில்லியில் உயர் எச்சரிக்கை நிலையில் இருக்குமாறு உளவுத் துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், தில்லியின்முக்கிய பகுதிகள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல், வாகனங்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டு தாக்குதல் நடத்துதல், துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சிக்கப்படுவதாக பாதுகாப்பு முகமைகளுக்கு தகவல் கிடைத்திருந்தது.
Summary
9 with links to Pakistan's ISI arrested, had planned terror attacks in Delhi, Mumbai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









