திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோசெவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர்.

News image

தாக்குதலுக்குள்ளான ரயில். - AP

Updated On :24 மே 2026, 1:05 pm IST

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் குவெட்டா பகுதியில் உள்ள சமன் படக் அருகே ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து வாகனத்தைக் கொண்டு இன்று தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவல் கிடைத்ததும் உள்ளூர் மக்கள், அவசரகாலக் குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த தாக்குதலால் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், அருகிலுள்ள கட்டடங்களின் ஜன்னல்களும் கண்ணாடிகளும் நொறுங்கியதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ரயில் தண்டவாளம் அருகில் இருந்த பல வீடுகளும் வாகனங்களும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் ரயில் தடம் புரண்டதுடன் அதன் பெட்டி ஒன்று தீப்பிடித்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவித்தன. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பலூச் விடுதலை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Summary

At least 24 people were killed on Sunday in a blast targeting a train carrying military personnel in Pakistan's southwestern province of Balochistan, AFP reported quoting a senior official.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.