மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய சுகாதார இயக்கத்தை அமல்படுத்தத் தயாராகி வருவதாகவும், இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 2,103 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற சுகாதாரத் துறையின் நிகழ்ச்சி ஒன்றில் சுவேந்து அதிகாரி கலந்துகொண்டார்.
வங்காளத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.36 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைய உள்ளதாகவும், இதன் மூலம், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் தரமான சுகாதாரச் சேவைகளைப் பெறுவது உறுதி செய்யப்படும்.
மேற்கு வங்கத்தில் தேசிய சுகாதார இயக்கத்தை அமல்படுத்தும். இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 2,103 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ. 527 கோடியை ஏற்கெனவே பெற்றுவிட்டனர். இந்த நிதியானது, மாநிலம் முழுவதும் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்த உதவும் என்று அதிகாரி கூறினார்.
மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மருத்துவமனைகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
Summary
West Bengal Chief Minister Suvendu Adhikari on Saturday said the state is set to implement the National Health Mission, and the Centre has sanctioned Rs 2,103 crore for the scheme.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









