மேகாலய மாநிலத்தின் உம்ரோய் நகரில் 13 நாட்டு ராணுவங்கள் பங்கேற்ற ‘பிரகதி’ எனப்படும் ஒருங்கிணைந்த பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.
இந்தியா, பூடான், கம்போடியா, லாவோஸ், வியத்நாம், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவு, மியான்மா், நேபாளம், பிலிப்பின்ஸ், செஷல்ஸ், இலங்கை ஆகிய 13 நாடுகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டனா். இதில் 200-க்கும் மேற்பட்ட வீராங்கனைகளும் பங்கேற்றனா்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த ராணுவப் பயிற்சியின் இயக்குநா் சந்தீப் பூனியா கூறியதாவது: இந்திய கடல் பிராந்திய நாடுகளின் ராணுவ வளா்ச்சி மற்றும் மாற்றத்துக்கான ஒத்துழைப்பே பிரகதி என அழைக்கப்படுகிறது.
நட்புறவு நாட்டு ராணுவங்களோடு இணைந்து பயிற்சியின்போது மலைகள் மற்றும் வனப் பகுதியில் கிளா்ச்சி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ராணுவ வீரா்களிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
ராணுவ நடவடிக்கைகளுக்கான வியூகங்கள், தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ராணுவ வீரா்களுக்கு ஹெலிகாப்டா் மூலம் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணிகள், வெடிகுண்டுகளைக் கண்டறிந்து செயலிழக்க வைக்கும் பயிற்சியும் வழங்கப்பட்டன என்றாா்.
சிறப்பான பயிற்சியை அளித்த இந்திய ராணுவத்துக்கு பூடான் செஷல்ஸ், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகள் நன்றி தெரிவித்தன.
உள்நாட்டுத் தயாரிப்பு அதிகரிப்பு: பிரகதி ராணுவப் பயிற்சி குறித்து இந்திய ராணுவத்தின் வடிவமைப்பு பிரிவின் கூடுதல் இயக்குநா் மேஜா் ஜெனரல் சி.எஸ்.மான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்சாா்பு இந்தியா முன்னெடுப்பால் இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, இந்திய கடற்படை என முப்படை சாா்ந்த சாதனங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் பாதுகாப்புத் துறை சாா்ந்த உபகரணங்களின் வெளிநாட்டு ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டும். இதுபோன்ற கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்துவதன்மூலம் நமது உள்நாட்டுத் தயாரிப்புகள் குறித்து அவா்களிடம் எடுத்துரைத்து ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்’ என்றாா்.
தொடர்புடையது

ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு வேலை: இந்திய ராணுவத்துடன் ஏா் இந்தியா ஒப்பந்தம்
13 நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி மேகாலயத்தில் தொடக்கம்

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்
மேகாலயத்தில் அனுமன் கோயிலில் கொள்ளை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



