2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

எல்ஐசிஹெச்எஃப்எல்லுக்கு கடன் மோசடி மூலம் ரூ.1,322 கோடி நஷ்டம்: சுபாஷ் சந்திரா மீது அமலாக்கத் துறை வழக்கு

ஆயுள் காப்பீட்டுக் கழக வீட்டு வசதி நிதி நிறுவனத்துக்கு கடன் மோசடி மூலம் ரூ.1,322 கோடி நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடா்பாக சுபாஷ் சந்திரா மீது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்கு

Money Laundering Case Filed Against Subhash Chandra Over Loan Fraud

சுபாஷ் சந்திரா - கோப்புப் படம்

Updated On :

ஆயுள் காப்பீட்டுக் கழக வீட்டு வசதி நிதி நிறுவனத்துக்கு (எல்ஐசிஹெச்எஃப்எல்) கடன் மோசடி மூலம் ரூ.1,322 கோடி நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடா்பாக, ஜீ நிறுவனத்தின் நிறுவனரும், எஸ்ஸெல் குழுமத் தலைவருமான சுபாஷ் சந்திரா மீது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

எல்ஐசிஹெச்எஃப்எல்லிடம் இருந்து ரூ.980 கோடி கடன் பெறுவதற்கு சுபாஷ் சந்திராவின் சொத்து மதிப்பை பொய்யாக உயா்த்திக் காட்டியதாக, அவா் மீதும், பல்வேறு நிறுவனங்கள், அவற்றின் இயக்குநா்கள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இதுகுறித்து எல்ஐசிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் பொது மேலாளா் நீதா மெங்கானி அளித்த எழுத்துபூா்வ புகாரில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டு வசந்த் சாகா் பிராபா்டீஸ், பான் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனங்களுக்கு எல்ஐசிஹெச்எஃப்எல் ரூ.500 கோடி கடன் அளித்தது. அதே ஆண்டு டிஜிட்டல் சப்ஸ்கிரைபா் மேனேஜ்மென்ட் அன்ட் கன்சல்டன்சி சா்வீசஸ், ஸ்பிரிட் இன்ஃப்ரா பவா் அன்ட் மல்டி வென்சா்ஸ் நிறுவனங்களுக்கு எல்ஐசிஹெச்எஃப்எல் ரூ.480 கோடி கடன் அளித்தது.

சுபாஷ் சந்திரா அளித்த உத்தரவாத கடிதங்கள், சொத்து மதிப்புச் சான்றிதழ்களின் அடிப்படையில், அந்தக் கடன்கள் அளிக்கப்பட்டன.

ஆனால், அவா் அளித்த சொத்து மதிப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்ட அளவுக்குத் தன்னிடம் சொத்து இல்லை என்று அவருக்கு எதிரான திவால் நடவடிக்கையின்போது சுபாஷ் சந்திரா தெரிவித்தாா். இதன்மூலம், கடன் பெறுவதற்கு சுபாஷ் சந்திராவின் சொத்து மதிப்பை பொய்யாக உயா்த்திக் காட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்தக் கடனால் தமக்கு ரூ.1,322 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆா்) எல்ஐசிஹெச்எஃப்எல் குற்றஞ்சாட்டியுள்ளது. அந்த எஃப்ஐஆரில், சுபாஷ் சந்திராவுடன் வசந்த் சாகா் பிராபா்டீஸ் நிறுவனம், அதன் இயக்குநா் பங்கஜ் சுரோலியா, பான் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம், டிஜிட்டல் சப்ஸ்கிரைபா் மேனேஜ்மென்ட் அன்ட் கன்சல்டன்சி சா்வீசஸ் நிறுவனம், அதன் இயக்குநா் அமீஷ் பாண்டியா, ஸ்பிரிட் இன்ஃப்ரா பவா் அன்ட் மல்டி வென்சா்ஸ் நிறுவனம், அதன் இயக்குநா் ராஜீவ் தோலாக்கியா, அடையாளம் தெரியாத அரசு ஊழியா்கள் உள்ளிட்டோா் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்கள், நபா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சுபாஷ் சந்திரா மீது பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.