ஒடிஸா நிலச்சரிவு: மேலும் 5 போ் உடல்கள் மீட்பு; 6 போ் தொடா்ந்து மாயம்
ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 5 போ் உடல்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன.
ஒடிஸா நிலச்சரிவு - dinmani online
ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 5 போ் உடல்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, நிலச்சரிவில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. மாயமான மேலும் 6 பேரை தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
அா்னாப் புயலின் தாக்கத்தால், ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் கடந்த அக்.28-இல் 540 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. ஓராண்டு சராசரியைவிட அதிக அளவில் பெய்த இந்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
பாஞ்சாநகா் பகுதியில் உள்ள கிதிபாபாலி என்ற மலை கிராமத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் புதைந்தன. இதையடுத்து, தேசிய-மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் உள்பட பல்வேறு முகமையினா் ஒருங்கிணைந்து, மீட்புப் பணியைத் தொடங்கினா்.
ஏற்கெனவே இருவா் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 5 பேரின் உடல்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன. இடிபாடுகளில் இன்னும் 6 போ் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. அவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. பெரிய பாறைகள், மரங்கள் சரிந்துள்ளதால், மீட்புப் பணியில் கடும் சவால் நிலவுகிறது.
ரூ.2,526 கோடி தேவை: அா்னாப் புயலால், ஒடிஸாவின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்களை சீா் செய்ய ரூ.2,526 கோடி தேவை என்று மத்திய அரசிடம் மாநில அரசு கோரியுள்ளது.
ஒடிஸாவில் அடிக்கடி நேரிடும் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீா்வுகாணும் செயல்திட்டத்துக்கு ரூ.10,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, மாநில சிறப்பு நிவாரண ஆணையா் ராஜேஷ் பி.பாட்டீல் தெரிவித்தாா்.
மத்திய உள்துறை இணை செயலா் ரவி சங்கா் தலைமையில் பல்வேறு அமைச்சக அதிகாரிகள் அடங்கிய மத்தியக் குழு ஒடிஸாவுக்கு வந்துள்ளது. புவனேசுவரத்தில் தலைமைச் செயலா் அனு காா்க் மற்றும் மத்தியக் குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

