மாவோயிஸ்ட் கொள்கையால் நேஹா போரா ஈர்க்கப்பட்டுள்ளார்! - பாஜக குற்றச்சாட்டு!
அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா குறித்து பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது...

அகில இந்திய மாணவா் சங்கத் தலைவா் நேஹா போரா. - கோப்புப் படம்
அகில இந்திய மாணவர் சங்கத் தலைவரான நேஹா போரா மாவோயிஸ்ட் கொள்கைகளால் ஈரக்கப்பட்டுள்ளார் என பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், சட்டவிரோதமான முறையில் தன்னிச்சையாகச் செயல்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதில், அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் (ஏஐஎஸ்ஏ) நேஹா போரா மற்றும் இடதுசாரிகள் இணைந்து ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் போராட்டங்களையும் பேரணிகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேஹா போரா மாவோயிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், ஏஐஎஸ்ஏ அமைப்பினர் ஆயுத பலத்தைப் பயன்படுத்தி அரசைக் கவிழ்க்க அழைப்பு விடுத்ததாகவும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுபற்றி, அவர் இன்று (நவ. 6) கூறுகையில்,
“நேஹா போரா தொடர்புடைய அமைப்பைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் பிரிவு 167-ன் கீழ் ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அதன்படி, தாங்கள் அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானவர்கள் என்றும், ஆயுத பலத்தைப் பயன்படுத்தி நாட்டில் அரசைக் கவிழ்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவர் (நேஹா) சீனாவின் ‘ரெட் ஆர்மி’ அமைப்பால் ஈர்க்கப்பட்டவர். அவர் ஒரு மாவோயிஸ்ட் தலைவர்” எனக் கூறியுள்ளார்.
Summary
The BJP has criticized Neha Bora, president of the All India Students' Federation, alleging that she has been influenced by Maoist ideologies.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


