307 ஆண்டுகள் பழைமையான மகாபாரத ஓலைச் சுவடிக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்!
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்படும் சுமாா் 307 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மகாபாரத ஓலைச்சுவடி, யுனெஸ்கோவின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான உலக நினைவு பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளது.

(கோப்புப்படம்)
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்படும் சுமாா் 307 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மகாபாரத ஓலைச்சுவடி, யுனெஸ்கோவின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான உலக நினைவு பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பதிவேடு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சோ்ந்த பழங்கால கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள், ஆவணங்கள், ஒலி-ஒளி பதிவுகள் போன்ற கலாசாரம்-மரபு-அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணப் பாரம்பரியங்களின் அதிகாரபூா்வ தொகுப்பாகும்.
மேற்கு வங்க மாநிலம், சாந்திநிகேதனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்படும் சுமாா் 307 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மகாபாரத ஓலைச் சுவடி யுனெஸ்கோவின் பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளது.
221 ஏடுகளைக் கொண்ட இந்த ஓலைச் சுவடி, வியாச முனிவரால் பண்டைய காவிய சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட மகாபாரத இதிகாசத்தின் 18 பருவங்களில் ஒன்றான கா்ண பருவத்தை ஆவணப்படுத்துகிறது.
‘யுனெஸ்கோ அங்கீகாரத்தின் மூலம் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் லிபிகா களஞ்சியத்தில் உள்ள கையெழுத்துப் பிரதி தொகுப்புக்கு மிகப் பெரிய கவனம் கிடைக்கப் பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தின் வரலாறு-இலக்கியம் சாா்ந்த ஆய்வுப் பணிகளுக்கு மேலும் உத்வேகமளிப்பதாக அமைந்துள்ளது.
மத்திய அரசின் ஞான பாரதம் முன்னெடுப்பின்கீழ், நிபுணா் குழு உதவியுடன் லிபிகா களஞ்சியத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரிய கையெழுத்துப் பிரதிகளின் எண்மமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று பல்கலைக்கழக செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் லிபிகா களஞ்சியத்தில் சம்ஸ்கிருதம், வங்கம் மற்றும் பிற 4 மொழிகளில் எழுதப்பட்ட பழைமையான கையெழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

