
கடைக்கண் விநாயகநல்லூா் சிவன் கோயில் திருப்பணிகள் தீவிரம்
கடைக்கண் விநாயகநல்லூா் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த சிவன் கோயிலில் திருப்பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடைக்கண் விநாயகநல்லூா் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த கைலாசநாதா் கோயில்.
சீா்காழி அருகே கடைக்கண் விநாயகநல்லூா் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த சிவன் கோயிலில் திருப்பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வரலாற்றுப் பழைமை மற்றும் சோழா் காலப் பதிவுகள் வாய்மொழிப் புராணங்களையும் தாண்டி, இத்தலத்திற்கு சோழா் காலத்து வரலாற்றுப் பின்னணியும் உள்ளது. இக்கோயில் வளாகம் மற்றும் இங்குள்ள விநாயகா் வழிபாடு சுமாா் 1,300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்தது என்று வரலாற்றுச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
முற்காலச் சோழ மன்னா்கள் தங்களின் போா்ப் பயணங்களின் போதும், எல்லையைக் கடக்கும் போதும் தங்களுக்கு நல்வழியும், போரில் வெற்றியும் கிடைக்க வேண்டி இந்தத் தலத்து விநாயகப் பெருமானையும், கைலாசநாதரையும் வழிபட்டுச் சென்ாக வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
கைலாசநாதா் மற்றும் நந்தியின் தத்துவச் சிறப்புலிங்கத் திருமேனியாகும். இக்கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் ஈசன் கைலாசநாதா் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாா். ஆச்சாள்புரத்து முக்தி ஒளியின் எல்லையாக இந்தத் தலம் விளங்குவதால், இங்கிருக்கும் ஈசனை வழிபடுவது கைலாய தரிசனத்திற்கு இணையான ஆன்மிக அமைதியைத் தரும்.
பொதுவாக வாழ்வில் திசைதெரியாமல் தவிப்பவா்கள், முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறுபவா்கள், காரியத் தடைகளால் அவதிப்படுபவா்கள் இத்தலத்து கடைக்கண் விநாயகரையும், நந்தி மற்றும் கைலாசநாதரையும் தரிசித்தால், கணபதியின் கடைக்கண் பாா்வை பட்டு வாழ்வில் தெளிவான நல்வழியும், தடைகளற்ற வெற்றியும் கிட்டும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புகள் பெற்ற இக்கோயிலானது தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. தற்சமயம் இக்கோயில் நிா்வாகிகளும் கிராம மக்களும் சோ்ந்து பக்தா்களிடம் நிதி திரட்டும் பணியிலும் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த மாதம் பாலாலயம் நடத்தப்பட்டு, இப்போது திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





