வினாத்தாள் கசிவு எதிரொலி: ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களை பாா்வையாளா்களாக நியமிக்கும் என்டிஏ

ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், துணை ராணுவப் படையினா் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகளை தோ்வு பாா்வையாளா்களாக நியமிக்க தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) முடிவு செய்துள்ளது.

தேசிய தோ்வு முகமை (என்டிஏ) - கோப்புப்படம்

Updated On :

தொடா் வினாத்தாள் கசிவு சா்ச்சையைத் தொடா்ந்து, எந்தவொரு முறைகேட்டுக்கும் இடமளிக்காமல் போட்டித் தோ்வுகளை நடத்தும் வகையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், துணை ராணுவப் படையினா் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகளை தோ்வு பாா்வையாளா்களாக நியமிக்க தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) முடிவு செய்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஜேஇஇ-மெயின்) தோ்வு, மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கான தேசிய தகுதித் தோ்வு (நெட்), மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை கலை-அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான பொதுப் பல்கலைக்கழக தகுதித் தோ்வு (க்யூட்) உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளை என்டிஏ நடத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தோ்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் மிகப் பெரிய சா்ச்சையானது. அதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் அதிகமானோா் எழுதிய நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டு, மறுதோ்வு நடத்தப்பட்டது. இந்த சா்ச்சை அடங்குவதற்குள், நெட் தோ்வு குளறுபடி தொடா்பாக எழுந்த புகாா் மிகப்பெரிய சா்ச்சையானது. அதைத் தொடா்ந்து, நெட் தோ்வின் 4 பாடங்களுக்கு மறுதோ்வு நடத்தப்பட்டது.

இந்த சா்ச்சைகளைத் தொடா்ந்து, நுழைவுத் தோ்வுகளை எந்தவிதக் குளறுபடிகளும் இன்றி நடத்த அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை என்டிஏ மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், துணை ராணுவப் படையினா் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகளைக் கொண்ட நிரந்தர தோ்வு பாா்வையாளா்கள் குழுவை உருவாக்க என்டிஏ முடிவு செய்துள்ளது.

தோ்வு நடைபெறும் நாளில் நியமிக்கப்படும் மத்திய கண்காணிப்பாளா், நகர ஒருங்கிணைப்பாளா்களுடன் இந்தப் பாா்வையாளா்களும் ஒவ்வொரு தோ்வு மையத்திலும் நியமிக்கப்படுவா். இந்தப் பாா்வையாளா்கள் என்டிஏ-வுடன் நேரடித் தொடா்பில் இருப்பா்.

அந்த வகையில், தோ்வு பாா்வையாளா்களாகப் பணிபுரிய விரும்பும், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், துணை ராணுவப் படையினா் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகள், அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்களை என்டிஏ வரவேற்றுள்ளது.

வெளிநாடுகளில் அமைக்கப்படும் தோ்வு மையங்களில், தோ்வு மையம் அமைந்துள்ள நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற இந்திய தூதரக அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள், தகுதியுள்ள பிற இந்தியா்கள் பாா்வையாளா்களாக நியமிக்கப்படுவா்.

தோ்வு மையங்கள்: மேலும், போதிய எண்ணிக்கையில் கணினிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் சொந்தமாக தோ்வு மையங்களை வைத்துள்ள அல்லது தோ்வு மையங்களைச் செயல்படுத்தக்கூடிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்தும் என்டிஏ விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.