தேசியவாத காங்கிரஸ் ஒன்றிணைவது அஜித் பவார் மறைவுடன் முடிந்துவிட்டது! - சுப்ரியா சுலே பேச்சு!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணையும் அத்தியாயம் அஜித் பவாரின் மறைவுடன் முடிந்துவிட்டது என சுப்ரியா சுலே பேச்சு...

Supriya Sule rules out NCP factions merger

சுப்ரியா சுலே

Updated On :

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் ஒன்றிணையும் அத்தியாயம் அஜித் பவாரின் மறைவுடன் முடிந்துவிட்டது என சரத் பவார் அணியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில், முன்னாள் முதல்வர் சரத் பவார் மற்றும் மறைந்த முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு வெவ்வேறு அணிகளும் ஒன்றிணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஜித் பவாரின் மனைவியும், தற்போதைய மகாராஷ்டிர துணை முதல்வருமான சுனேத்ரா பவார் அணியும், காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணியில் சரத் பவாரின் அணியும் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணையும் அத்தியாயம் அஜித் பவாரின் மறைவுடன் முடிந்துவிட்டது என சரத் பவார் அணியின் செயல் தலைவரும், பாராமதி தொகுதி மக்களவை உறுப்பினருமான சுப்ரியா சுலே இன்று (நவ. 12) தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறுகையில்,

“என் சகோதரர் (அஜித் பவார்) மறைந்துவிட்டார். அந்த நாளிலேயே அணிகள் ஒன்றிணையும் விவகாரம் என்னைப் பொறுத்தவரை முடிவுக்கு வந்துவிட்டது.

எனக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே கட்சியின் இரு அணிகளும் ஒன்றிணைவது குறித்து என்னிடம் எந்தத் தகவலும் இல்லை. இதுபற்றி, என்னிடம் யாரும் பேசவில்லை” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளையும் ஒன்றிணைப்பது குறித்த பேச்சுவார்த்தையை, அஜித் பவார் மறைவதற்கு முன்பாகவே அவர் தொடங்கியிருந்தார் என்பதை சுப்ரியா சுலே உறுதி செய்துள்ளார்.

Summary

Supriya Sule rules out NCP factions merger

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.