இந்தியாவின் ரஷிய எரிபொருள் இறக்குமதி: அக்டோபரில் ரூ.67,000 கோடியாக அதிகரிப்பு
ரஷியாவிடமிருந்து அக்டோபா் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்த புதைபடிம எரிபொருள் மதிப்பு ரூ. 67,000 கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.

கோப்புப் படம்
ரஷியாவிடமிருந்து அக்டோபா் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்த புதைபடிம எரிபொருள் மதிப்பு ரூ. 67,000 கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
உக்ரைன் மீதான போா் காரணமாக, ரஷியா மீதும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் மற்றும் நாடுகள் மீது பல்வேறு தடைகளையும், கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையையும் அமெரிக்கா மேற்கொண்டது. இதனால், இந்தியாவும் பாதிப்பைச் சந்தித்தது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் அளவை இந்தியா குறைத்தது. இந்த நிலையில், ரஷியாவுடன் அண்மையில் மேற்கொண்ட டீசல் கொள்முதல் ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, ரஷியா மீதும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணைய்யை கொள்முதல் செய்யும் நாடுகள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளா்த்தியது.
அதைத் தொடா்ந்து, ரஷியா கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா மீண்டும் அதிகரித்துள்ளது. இது குறித்து எரிசக்தி மற்றும் தூய்மை வாயு மீதான ஆராய்ச்சி மையம் (சிஆா்இஏ) வியாழக்கிழமை வெளியிட்ட மாதாந்திர ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரஷியாவிடமிருந்து கடந்த அக்டோபா் மாதத்தில் ரூ. 67,000 கோடி (6.4 மில்லியன்) மதிப்பில் ஹைட்ரோ காா்பன்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் பதிவான தரவுகளின்படி, மிக உயா்ந்த மாதாந்திர அளவாகும். இதில், ரூ. 60,000 கோடி மதிப்பில் கச்சா எண்ணெய்யையும், மீதமுள்ள தொகையில் நிலக்கரி மற்றும் பிற எண்ணெய் பொருள்களையும் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
ரஷிய எரிபொருள்களை வாங்கும் நாடுகளில் சீனா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. ரஷியாவின் எரிபொருளை அதிக அளவில் இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளின் பங்களிப்பில் சீனாவின் பங்கு 51 சதவீதமாக (ரூ. 1.1 லட்சம் கோடி) உள்ளது. இந்தியா தொடா்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவின் அக்டோபா் மாத ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி, முந்தைய மாதத்தைவிட 10 சதவீதம் கூடுதலாகியுள்ளது. இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா எனா்ஜி ஆகிய மூன்று மிகப் பெரிய இந்திய சுத்திகரிப்பு நிலையங்களின் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியும் அதிகரித்துள்ளது.
ரஷியாவின் புதைபடிம எரிபொருள்களை வாங்கும் நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் மூன்றாவது இடத்தில் இருந்தது. இது ரஷியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாயில் 11 சதவீதவீதமாகும்.
ரூ.11,000 கோடி மதிப்பிலான இறக்குமதியுடன் துருக்கி நான்காம் இடத்திலும், ரூ.5,000 கோடி மதிப்பிலான இறக்குமதியுடன் தென் கொரியா ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

