அந்தமான் - நிகோபார், ராஜஸ்தானில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் இன்று(நவ.14) பலத்த மழைக்கும், ராஜஸ்தானில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது குறித்து...

இந்திய வானிலை ஆய்வு மையம் - IMD
புதுதில்லி: அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் இன்று(நவ.14) பலத்த மழைக்கும், ராஜஸ்தானில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை அதிகாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவானது. இது வடமேற்கு திசையில் நகா்ந்து, சனிக்கிழமை (நவ.14 ) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், நவ.15 -இல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும். இதையடுத்து இந்தப் புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய வங்கக் கடலில் நவ.16-ஆம் தேதி புயலாக உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சியில் இருந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் வழியாக மாலத்தீவின் வடக்கு பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும். ராஜஸ்தானில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மேலும், அந்தமான் கடல் பகுதி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீடு
இதற்கிடையே, தில்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் 'மிக மோசமான' நிலையில் உள்ளது என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி தில்லியின் காற்றின் தரக் குறியீடு 348 ஆகப் பதிவாகியுள்ளது.
IMD has forecast heavy rainfall over Andaman and Nicobar Islands today. The Met Department said that thunderstorm accompanied with lightning and gusty winds may prevail over Rajasthan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


