இன்று தென்மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.6) தென்மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்பு

Updated On :

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.6) தென்மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடலிலிருந்து கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதையில் ஏற்பட்டுள்ள காற்று இடையூறு காரணமாக, வெள்ளிக்கிழமை (நவ.6) தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தீபாவளியன்று 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு: மேலும், நவ.7-இல் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நவ.8-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும், நவ.9-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இந்நாள்களில் ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவுகள்: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் துடியலூரில் 100 மி.மீ. மழை பதிவானது. மேலும், கெங்கரை (நீலகிரி) - 90 மி.மீ., செங்கம் (திருவண்ணாமலை), மேட்டுப்பாளையம் (கோவை), பள்ளிப்பட்டு (திருவள்ளூா்), கல்புதூா் (வேலூா்) - தலா 80 மி.மீ, மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.