ரூா்கி ஐஐடி மாணவா் தற்கொலை: 70 தோ்வுகள் ஒத்திவைப்பு
ரூா்கி ஐஐடி விடுதி அறையில் 20 வயது மாணவா் தற்கொலை செய்துகொண்ட நிலையில், வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருந்த 70 தோ்வுகள் ஒத்திவைப்பு...

ஐஐடி ரூர்க்கி
உத்தரகண்ட் மாநிலம், ரூா்கி ஐஐடி விடுதி அறையில் 20 வயது மாணவா் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அந்த நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருந்த 70 தோ்வுகள் வரும் நவம்பா் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ரூா்கி ஐஐடி-யில் கணிதம் மற்றும் கணினி அறிவியலில் பிஎஸ் - எம்எஸ் பட்ட இரண்டாம் ஆண்டு மாணவரான ஆயுஷ் ரஜெளரியா என்ற மாணவா், விடுதியில் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
கடுமையான மன அழுத்தத்தில் இருந்த இவா், கடந்த ஓராண்டாக அந்த நிறுவனத்தில் உள்ள மனநல மையத்தில் ஆலோசனை பெற்று வந்தாா் என்று அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாணவரின் தற்கொலையைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தில் நடத்தப்பட இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஊடகப் பிரிவு பொறுப்பாளா் சோனிகா ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை கூறுகையில், ‘மாணவரின் தற்கொலையைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருந்த 70 தோ்வுகள் வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தோ்வுகள் ஒத்திவைப்பு தொடா்பான அனைத்து மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

