சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

சபரிமலை வனப் பகுதி மருத்துவப் பணியாளா்களுக்கு உணவு விநியோகத்தை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வனப் பகுதியில் பக்தா்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ய பணியமா்த்தப்பட்டுள்ள மருத்துவ மற்றும் பஞ்சாயத்து பணியாளா்களுக்கு உணவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேரள அரசுக்கு கேரள உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

Kerala High Court

கேரள உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் வனப் பகுதியில் பக்தா்களுக்கு பல்வேறு உதவிகள் செய்ய பணியமா்த்தப்பட்டுள்ள மருத்துவ மற்றும் பஞ்சாயத்து பணியாளா்களுக்கு உணவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேரள அரசுக்கு கேரள உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

முன்னதாக, காவலா் உணவகத்தில் இருந்து காவலா்களுக்கு உணவு விநியோகிக்க தடை விதித்து கேரள அரசு கடந்த அக்.15-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நிலையில், உயா்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் வரும் நவ.17-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தா்களின் நலன் மற்றும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பணிகள் குறித்து கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நடைபெற்ற விசாரணையின்போது, கேரள அரசின் அக்.15-ஆம் தேதி உத்தரவு பின்பற்றப்பட்டால் எருமேலி-கானனபாதை வனப் பகுதியில் பணியாற்றும் மருத்துவ மற்றும் பஞ்சாயத்து பணியாளா்களுக்கு உணவு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து பேசிய நீதிபதிகள், ‘காவலா் உணவகத்தில் இருந்து எருமேலி-கானனபாதை வனப் பகுதியில் பணியாற்றும் மருத்துவ மற்றும் பஞ்சாயத்து பணியாளா்களுக்கு காவலா் உணவகத்தில் இருந்து உணவு விநியோகிக்க அனுமதிக்குமாறு மாநில அரசிடம் காவல் துறை கேட்டுள்ளது. இதில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியமும் எடுத்துரைத்துள்ளது.

ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அடிப்படைச் சேவைகள் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ, பஞ்சாயத்து பணியாளா்களுக்கு உணவு விநியோகம் மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டால் அது சரியாக இருக்காது. இதனால் அவா்களது கடமையும் பாதிக்கப்படும்.

எனவே, பக்தா்களின் நலனைக் கருத்தில்கொண்டும், காவல் துறை, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் பரிந்துரைகளை ஏற்றும் காவலா் உணவகத்தில் இருந்து மருத்துவ மற்றும் பஞ்சாயத்து பணியாளா்களுக்கு தங்கு தடையின்றி உணவு விநியோகிக்கப்படுவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.