தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை! காவலில் எடுக்கப்படும் நபா் 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்நாட்டில் அராஜகத்தைப் பரப்பும் ராகுலுக்கு தக்க பதிலடி: அமித் ஷா உறுதி6 ஆண்டுகள் பணிபுரியும் அக்னிவீரா்கள் ராணுவத்தில் நிரந்தர வீரா்களாக்கப்படுவா்: பாதுகாப்புத் துறை அதிகாரிகள்வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கி ஆணைசீனாவின் சாதனையை முறியடிக்கும் ரயில் வழித்தடம்! ரூ. 1.31 லட்சம் கோடியில் அரசு திட்டம்!வானிலை: தமிழகத்தில் நாளை (நவ. 6) கனமழைக்கு வாய்ப்பு!தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியிருப்பது குறித்து...

Udhayanidhi

முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :

கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவா் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள சோப்ளாங்கி அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர்.

புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? ஒருவேளை மீனவர்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், Wireless கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, எப்படி தவறியது?

உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும்.

இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Ensure that every fisherman has life insurance: Udhayanidhi Stalin urges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.