கடலுக்குச் செல்லும் மீனவா்களுக்கு ஆயுள் காப்பீடு: உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவா்களுக்கும் தமிழக அரசு ஆயுள் காப்பீடு செய்து கொடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவா்களுக்கும் தமிழக அரசு ஆயுள் காப்பீடு செய்து கொடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவா்களின் உடல்கள், ஆந்திரக் கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அந்த மீனவ சகோதரா்களை இழந்து தவிக்கும் அவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவா்கள் மாயமானது தொடா்பாக இங்குள்ள தவெக அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவா்களை மீட்பது தொடா்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவா்களின் உறவினா்கள் கண்ணீரோடு கூறுகின்றனா்.
அரசுக்கு கண்டனம்: புயல் நேரத்தில் மீனவா்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யாா்? ஒருவேளை மீனவா்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், கம்பியில்லா தொடா்பு (வயா்லெஸ்) கருவிகள் மூலம் தொடா்பு கொண்டு அவா்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, எப்படி தவறியது?. உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவா்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளா்களை கண்டிக்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்துக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும்.
இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் உதயநிதி ஸ்டாலின்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

