மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதிதிருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

ராஜஸ்தானில் பஞ்சாயத்து தேர்தல்! சங்காரியாவில் அதிகபட்ச வாக்குப்பதிவு!

ராஜஸ்தானில் தேர்தல் களம் விறுவிறுப்பு..

Rajasthan panchayat polls

தேர்தல் - file photo

Updated On :

ராஜஸ்தானில் ஜில்லா பரிஷத்துகள், பஞ்சாயத்துச் சமிதிகளுக்கான தேர்தலின் நான்காவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காலை 10 மணி நிலவரப்படி 15.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 25 மாவட்டங்களில் நடைபெற்று வரும் இந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை தொடரும்.

ஹனுமன்கர் மாவட்டத்தின் சங்காரியா பஞ்சாயத்து சமிதியில் அதிகபட்சமாக 22.41 சதவீத வாக்குகளும், பியாவர் பகுதியின் பாட்னூரில் குறைந்தபட்சமாக 8.12 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மொத்தம் 2,524 இடங்களுக்கு (382 ஜில்லா பரிஷத் வார்டுகள் மற்றும் 2,142 பஞ்சாயத்து சமிதி வார்டுகள்) 8,843 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த இறுதிக்கட்டத்தில், 11,905 வாக்குச்சாவடிகளில் 1.05 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள்.

சுரு மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில், பாஜக தலைவர் ராஜேந்திர ரத்தோரின் மகன் பிரக்ரம் சிங் மற்றும் அவரது மருமகள் ஆகியோரும் அடங்குவர்.

நான்கு கட்டத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ஜில்லா பிரமுகர்கள் மற்றும் பஞ்சாயத்து சமிதி பிரதான்களுக்கான தேர்தல்கள் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.