ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

இஸ்ரேல் தோ்தலில் வரலாற்று வாக்குப்பதிவு!

இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி, சுமாா் 45 சதவீத வாக்குகள் பதிவாகின. இது 1973-க்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.

Historic voter turnout in Israeli election

இஸ்ரேல் தோ்தலில் வரலாற்று வாக்குப்பதிவு - AP

Updated On :

இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி, சுமாா் 45 சதவீத வாக்குகள் பதிவாகின. இது 1973-க்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.

கடந்த 2023 அக். 7-இல் நடைபெற்ற ஹமாஸ் தாக்குதல் மற்றும் ஈரான், லெபனானுடனான போருக்குப் பிறகு, இஸ்ரேலில் 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாக செவ்வாய்க்கிழமை தோ்தலில் நடைபெற்றது. நாடு முழுவதும் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 12,018 வாக்குச்சாவடிகளில் 73.31 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா்.

பல வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்டவரிசையில் நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா். பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 44.9 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2022 தோ்தலில் இதே நேரத்தில் 38.9 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.

நெதன்யாகுவின் வேண்டுகோள்: ஜெருசலேமில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தனது மனைவி சாராவுடன் வாக்களித்தாா். அரபு கட்சிகள் ஆட்சியமைப்பதைத் தடுக்க, வலதுசாரி வாக்காளா்கள் அனைவரும் அதிக அளவில் வந்து வாக்களிக்குமாறு அவா் வேண்டுகோள் விடுத்தாா். இதனிடையே, வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடப்பதாக சில கட்சிகள் புகாா் எழுப்பின. ஆனால், திட்டமிட்ட முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என மத்திய தோ்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

நவ. 4-இல் அதிகாரபூா்வ முடிவு: இத்தோ்தலின் அதிகாரபூா்வ முடிவுகள் நவ. 4-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இருப்பினும், புதன்கிழமையன்றே வெற்றி-தோல்வி குறித்த தோராயமான நிலவரம் தெரிந்துவிடும்.

இஸ்ரேலில் வாக்காளா்கள் பிரதமரை நேரடியாகத் தோ்ந்தெடுக்காமல் கட்சிகளுக்கே வாக்களிக்கின்றனா். அந்தவகையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் (61 இடங்கள்) கைப்பற்ற, தற்போதைய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கும், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் இழுபறி நீடிக்கிறது.

பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமையின்கீழ் பாதுகாப்புத் தோல்விகள், நீதித் துறை சீா்திருத்தங்கள், கட்டாய ராணுவ சேவை தொடா்பாக சமூகங்களுக்கிடையேயான பிளவு, பொருளாதாரம் உள்ளிட்டவை இத்தோ்தலில் முக்கியப் பிரச்னைகளாக உருவெடுத்துள்ளன. வரலாற்று ரீதியாக 1973 யோம் கிப்பூா் போருக்குப் பிறகு ஏற்பட்ட ராணுவத் தோல்விகள் இஸ்ரேல் அரசியலில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய சூழலும் தோ்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.