பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகள்! ஒருவர் பலி!திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு நவ. 16 வரை நீதிமன்றக் காவல்! ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கம்!அபாயத்தில் 6 லட்சம் மரங்களும் யானைகள் வாழ்விடமும்!!மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் கைது

பஞ்சாப்: பதான்கோட்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி முனையில் கார் திருட்டு!

பதான்கோட்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி முனையில் கார் திருடப்பட்ட சம்பவம் பற்றி....

Punjab: Car stolen at gunpoint on Pathankot-Jammu national highway

ஸ்ரீநகர்-ஜம்மு - கோப்புப்படம்.

Updated On :

பதான்கோட்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி முனையில் கார் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பதான்கோட்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டவுன்டவுன் பகுதியில், பதான்கோட்டைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான எஸ்யூவி ரக கார், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், அடையாளம் தெரியாத நபர், வாகன ஓட்டுநரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அந்த வெள்ளை நிற எஸ்யூவி காரைத் திருடிச் சென்றார். இந்த வாகனம் பதான்கோட்டின் பாமியல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பதான்கோட் மூத்த காவல் கண்காணிப்பாளர் மன்பிரீத் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினருக்கு முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறினார். விசாரணையின்படி, அந்த வாகனம் குர்தாஸ்பூர் பகுதி நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வாகனத்தைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Summary

An SUV belonging to a Pathankot resident was stolen at gunpoint in the Downtown area located on the Pathankot-Jammu national highway, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.