பைக்கை தூக்கி வீசிய கார்! நூலிழையில் பிழைத்த இளைஞர்! வைரலாகும் விடியோ
கார் மோதியதில் பறந்த பைக், நூலிழையில் பிழைத்த இளைஞரின் விடியோ

நூலிழையில் பிழைத்த இளைஞர்
தூத்துக்குடியில், சாலையோரம் நின்றிருந்த பைக்கை வேகமாக வந்த கார் தூக்கி வீசிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், சாலையோரம் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அதன் மீது அமர்ந்துகொண்டிருந்த இளைஞர், அடுத்த ஒரு சில நொடிகளில் தான் அதிர்ஷ்டசாலியா? துரதிருஷ்டசாலியா? என குழப்பத்துக்கு ஆளாவார் என்று சொல்லியிருந்தால் அவரே நம்பியிருக்க மாட்டார்.
ஒரு கடைக்கு வெளியே இந்த சிசிடிவி, இத்தனை நாள்களும் அவ்வழியே சென்று வரும் வாகனங்களுக்கு வெறும் சாட்சியாக மட்டுமே இருந்து வந்த நிலையில், இன்று அந்த சிசிடிவி உலகப் புகழ் பெற்றுள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று யாராவது சொன்னால் கற்பனையே செய்து பார்க்க முடியாது. ஆனால், அதனை நம்ப வைத்து அந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள்தான்.
சாலையோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை வேகமாக வந்த கார் தட்டித் தூக்க, அந்த நபர், யாரோ உட்காரும்போது சேரை இழுத்துவிட்டது போல எந்த அதிர்வும் இல்லாமல் அப்படியே நேராக சாலையில் விழுகிறார்.
அதெப்படி, ஒரு மோட்டார் சைக்கிளே பறந்துவிட்டது, அதன் மீது உட்கார்ந்திருந்த இவருக்கு எதுவும் ஆகவில்லையா என்று யாராவது கேள்வி கேட்டால் நிச்சயம் இந்த விடியோவை காட்டலாம்.
பைக்கில் வந்து, வீட்டுக்கு நடந்து சென்ற இந்த இளைஞர் பெயர் விக்னேஷ். திசையன்விளை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், இரு சக்கர வாகனத்தை இடித்ததில் அது வானில் பறந்து பல்டி அடித்து விழுந்து நொறுங்கியது. பைக் போச்சே என்று அழுவதா? நடந்து செல்ல கால்கள் இருக்கிறதே என்று சிரிப்பதா? எனத் தெரியாமல் விக்னேஷ் வீடு திரும்பியிருக்கிறார்.
ஆனால், இந்த விடியோவைப் பார்க்கும் பலரும், அந்த சாலையோ மிகவும் சிறிய சாலை. அதில் தன்னுடைய வாகனத்தை நிறுத்திய விக்னேஷ் மீதுதான் தவறு என பலரும் கருத்திட்டு வருகிறார்கள். இது குறித்து காவல்துறை புகார் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய தகவல்கள் தெரிய வரவில்லை.
Summary
Car flings! bike away Young man narrowly escapes Video goes viral
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

