ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகள்! ஒருவர் பலி!திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு நவ. 16 வரை நீதிமன்றக் காவல்! ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கம்!அபாயத்தில் 6 லட்சம் மரங்களும் யானைகள் வாழ்விடமும்!!மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் கைது

மேற்கு வங்கத்தில் சூரிய வழிபாட்டுடன் நிறைவடைந்த சத் பூஜை!

மேற்கு வங்கத்தில் சத் பூஜை விழா சிறப்பாக நிறைவடைந்தது பற்றி..

 Chhath Puja

சத் பூஜை - பிடிஐ

Updated On :

மேற்கு வங்கம் முழுவதும் திங்கள் கிழமை சூரிய வழிபாட்டுடன் சத் பூஜை கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நதிகள், குளங்கள், பிற நீர்நிலைகளில் சூரியனுக்கு வழிபாடு செய்தனர்.

பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே பல்வேறு படித்துறைகளில் கூடி, நீரில் நின்றபடி சூரியனுக்கு அர்க்கியம் (நீரால் வழிபாடு) வழங்கினர்.

சூரிய வழிபாட்டிற்குப் பிறகு பாரணா எனப்படும் நோன்பு முடிக்கும் சடங்கு நடைபெற்றது. இதன்மூலம், இந்த விழாவின் கடுமையான விரத முறை நிறைவு பெற்றது.

கொல்கத்தா, பாரக்பூர், ஹவுரா, ஆசான்சோல், துர்காபூர் மற்றும் சிலிகுரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், இந்தி மொழி பேசுபவர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இந்த விழா மிகுந்த பக்தி உணர்வுடன் கொண்டாடப்பட்டது.

மாநில அமைச்சர் இந்திரனில் கான், ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக, கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதிக்கரைகளில் அதிகாலையிலேயே நேரில் சென்று பார்வையிட்டார்.

மாநிலத் தலைநகரில் 163 இடங்களில் இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்திருந்தனர். ஹூக்ளி நதிக்கரை, ஆதி கங்கா, குளங்கள் மற்றும் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகள் இதில் அடங்கும்.

பக்தர்களுக்காகக் குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள், மின்விளக்கு வசதிகள், மருத்துவ உதவிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஏரிகளுக்கு வெளியே காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். மேலும் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைவதைத் தடுக்க ஏரி வளாகத்திற்குள் பெரிய அளவிலான காவலர் குழுவினர் நிறுத்தப்பட்டிருந்தனர். விழாவின் போது பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மைக்காக நகரம் முழுவதும் சுமார் 4,000 காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

நான்கு நாள்கள் நடைபெறும் இந்த விழா, நவம்பர் 13 அன்று நஹாய்-காய் நிகழ்வுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 14 அன்று கர்னா கடைப்பிடிக்கப்பட்டது. அன்று பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து, மாலை நேர வழிபாட்டிற்குப் பிறகு விரதத்தை நிறைவு செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, பக்தர்கள் மறையும் சூரியனுக்கு 'சந்தியா அர்க்கியா' வழங்கி வழிபட்டனர். இதன்போது, ​​மூங்கில் கூடைகளில் பழங்கள், பூக்கள், தேங்காய்கள் உள்ளிட்ட பொருள்களை வைத்து சூரியனுக்கு அர்ப்பணித்தனர்.

பிகார் , ஜார்க்கண்ட் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களிடையே 'சத் பூஜை' மிகவும் முக்கியமான விழாவாகக் கருதப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம், செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்து இந்த விழா கொண்டாடப்படுகிறது.

நான்காவது நாள் காலை உதிக்கும் சூரியனையும் பக்தர்கள் வழிபடுவார்கள். இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சூரியனைப் பூஜை செய்து வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.