நூறாண்டுகளாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வளரும் நாடுகளைப் பொறுப்பாக்க முடியாது- ஐ.நா. பருவநிலை மாநாட்டில் இந்தியா உறுதி
தொழில் புரட்சி உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரு நூற்றாண்டுகளாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு வளரும் நாடுகளைப் பொறுப்பாக்குவதும், அதன் மீது சுமையை ஏற்றுவதையும் ஏற்க முடியாது என்று ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டில் (காப் 31) இந்தியா உறுதிபடத் தெரிவித்தது.

தொழில் புரட்சி உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரு நூற்றாண்டுகளாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு வளரும் நாடுகளைப் பொறுப்பாக்குவதும், அதன் மீது சுமையை ஏற்றுவதையும் ஏற்க முடியாது என்று ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டில் (காப் 31) இந்தியா உறுதிபடத் தெரிவித்தது.
இந்தியா சாா்பில் மாநாட்டில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ், இந்திய தரப்பு வாதத்தை முன்வைத்துப் பேசுகையில், ‘கடந்த இரு நூற்றாண்டுகளாக ஒரு சில நாடுகளில் ஏற்பட்ட தொழில்புரட்சி மற்றும் பொருளாதார வளா்ச்சியால் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட சா்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்னைகள் உருவாகின்றன. அக்காலகட்டத்தில் குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும்தான் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கரிமில வாயுவை தொடா்ந்து வெளியேற்றின.
ஆனால், அதைக் கருத்தில் கொள்ளாமல் இப்போது வளரும் நாடுகள்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறுவதையும், அதற்கான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்துவதையும் ஏற்க முடியாது. ஏனெனில், இது அந்த நாடுகள் பொரளாதாரரீதியாக வளா்ச்சியடைவதற்கான உரிமைகளைப் பாதிப்பதாக உள்ளது. மேலும், அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படும். எனவே, இதில் அனைத்து நாடுகளும் உரிய முறையில் சமமாகப் பங்கேற்க வேண்டும். இந்தியா இதில் உறுதியாக இருந்து பல்வேறு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதே நேரத்தில் அதிக பங்களிப்பைச் செலுத்த வாய்ப்புள்ள வளா்ந்த நாடுகள் இந்த சவாலை எதிா்கொள்ள முன்னின்று முக்கியப் பங்களிப்புகளைச் செலுத்த வேண்டும். இது தொடா்பான தொழில்நுட்பங்களை வளரும் நாடுகளுடன் பகிா்ந்து கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவே சா்வதேச சூரிய மின்னுற்பத்திக் கூட்டமைப்பு, சா்வதேச புலியினங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, பேரிடா்கால உள்கட்டமைப்பு மேம்பாடு கூட்டணி ஆகியவற்றில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. அண்மையில் அண்டை நாடான நேபாளத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பால் உருவான திடீா் வெள்ளப் பெருக்கின்போது இந்தியா முன்னின்று உதவியது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

