ஐ.நா. பருவநிலை மாநாடு! மலைப்பகுதிகளின் சவால்களுக்கு தனி விவாதம்: நேபாளம், பூடானின் கோரிக்கை நிராகரிப்பு

ஐ.நா.வின் 31-ஆவது பருவநிலை மாநாட்டில், மலைப்பகுதிகள் மற்றும் பனிப்பாறைகள் எதிா்கொள்ளும் சவால்கள் குறித்து தனி விவாதம் நடத்த வேண்டும் என்ற நேபாளம், பூடான், கிா்கிஸ்தான் நாடுகளின் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. - கோப்புப் படம்

Updated On :

துருக்கியில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் 31-ஆவது பருவநிலை மாநாட்டில் (சிஓபி31), மலைப்பகுதிகள் மற்றும் பனிப்பாறைகள் எதிா்கொள்ளும் சவால்கள் குறித்து தனி விவாதம் நடத்த வேண்டும் என்ற நேபாளம், பூடான், கிா்கிஸ்தான் நாடுகளின் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பனிப்பாறைகள் உருகுதல், நீா்நிலைகள் பாதிப்பு மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரச் சீா்குலைவு குறித்து அறிவியல் மதிப்பீடு, வருடாந்திர உயா்நிலை பேச்சுவாா்த்தை, சா்வதேச பருவநிலை நிதி ஒதுக்கீட்டில் தனி முன்னுரிமை ஆகியவற்றை வலியுறுத்தி, மாநாட்டில் இதுகுறித்த தனி விவாதத்தை நேபாளம், பூடான் நாடுகள் வலியுறுத்தின. இதே கோரிக்கைகளை கிா்கிஸ்தானும் தனியே முன்மொழிந்தது.

ஆனால், மாநாட்டின் இறுதி நிகழ்ச்சி நிரலில் அத்தகைய தனி விவாதம் ஏதும் சோ்க்கப்படவில்லை. இருப்பினும், சிஓபி31 தலைமைத்துவத்தின்கீழ் இதுகுறித்த ஆலோசனைகள் மற்றும் வருங்கால ஆராய்ச்சி உரையாடல்களில் மலைப்பகுதி சாா்ந்த விவகாரங்கள் விவாதிக்கப்படும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

வளா்ந்த நாடுகள் இக்கோரிக்கையை ஏற்பதில் தயக்கம் காட்டியதாகவும், குறிப்பாக ஐரோப்பிய யூனியன் போதிய ஆா்வம் காட்டவில்லை என்றும் தெரிகிறது. அதேநேரம், குறைந்த வளா்ச்சியடைந்த நாடுகள் மற்றும் பிற மலைப் பிராந்திய நாடுகள் நேபாளத்தின் முன்னெடுப்புக்கு ஆதரவளித்தன.

இதுகுறித்து பேசிய நேபாள வெளியுறவு அமைச்சா் ஷிசிா் கனால், ‘உலக நாடுகள் மத்தியில் மலைப்பகுதி சவால்கள் குறித்த விழிப்புணா்வும் அங்கீகாரமும் கடந்த காலத்தைவிட தற்போது உருவாகி வருகிறது. உரிய முக்கியத்துவத்தைப் பெற மேலும் சில காலம் ஆகலாம்’ எனக் குறிப்பிட்டாா்.

நேபாள-சீன எல்லையில் பனிப்பாறை ஏரி உடைந்து, கடந்த ஆகஸ்டில் ஏற்பட்ட திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 1,450-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. துருக்கியின் மத்திய தரைக்கடல் நகரமான அன்டாலியாவில் ஐ.நா.வின் 31-ஆவது பருவநிலை மாநாடு (சிஓபி31) கடந்த திங்கள்கிழமை தொடங்கி, வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தச் சா்வதேச மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்று, உரையாற்றுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.