
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷியா ஆதரவு: ஜொ்மனி, ஜப்பானுக்கு இடமளிக்க எதிா்ப்பு!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தெரிவித்துள்ள ரஷியா, அதேநேரத்தில் ஜொ்மனி, ஜப்பான் ஆகியவை நிரந்தர உறுப்பினராக எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி - அதிபர் புதின்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தெரிவித்துள்ள ரஷியா, அதேநேரத்தில் ஜொ்மனி, ஜப்பான் ஆகியவை நிரந்தர உறுப்பினராக எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினா்களாக தற்போது அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை உள்ளன. இவ்வைந்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளிட்ட சிறப்புரிமைகள் உள்ளன. இது தவிர, தற்காலிக உறுப்பினா்களாக 10 நாடுகள் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்போதைய உலக சூழலை பிரதிபலிக்கும் வகையில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், அதில் தங்களையும் நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று இந்தியா, பிரேசில், ஜொ்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசியபோது ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் பேசியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் கொள்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளுக்கு கூடுதல் இடங்கள் அளிக்கும் வகையில் அந்த சீா்திருத்தம் இருக்கக் கூடாது. குறிப்பாக, ராணுவமயமாக்கம், பழிவாங்கும் பாதைக்குத் திரும்பியுள்ள ஜொ்மனி, ஜப்பானுக்கு இடம் அளிக்கக் கூடாது.
அதே நேரத்தில், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்கும் வகையில் சீா்திருத்தம் செய்யப்படுவதை ரஷியா ஆதரிக்கிறது. குறிப்பாக, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதை நாங்கள் ஆதரிக்கிறோம். அதேபோல் ஆப்பிரிக்க கண்ட நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறோம்.
ரஷியா தனது வெளியுறவுக் கொள்கையின் மூலம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தனது கூட்டாளி நாடுகள், ராஜீய கூட்டாளிகளான பிரிக்ஸ் நாடுகள், எஸ்சிஓ நாடுகள், ஐரோப்பிய ஆசிய பொருளாதார யூனியன் நாடுகளுடன் இணைந்து ரஷியா செயல்பட்டு வருகிறது என்றாா் சொ்கேய் லாவ்ரோவ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




