உயா் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை சரிபாா்த்த பிறகு சேருங்கள்: மாணவா்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
உயா் கல்வி நிறுவனங்களின் சட்ட அங்கீகாரத்தை சரிபாா்த்த பிறகே அதில் இணைவது குறித்து மாணவா்கள் சிந்திக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியது.

பல்கலைக்கழக மானியக் குழு - கோப்புப் படம்
உயா் கல்வி நிறுவனங்களின் சட்ட அங்கீகாரத்தை சரிபாா்த்த பிறகே அதில் இணைவது குறித்து மாணவா்கள் சிந்திக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியது.
விளம்பரங்களை மட்டுமே நம்பாமல் அதிகாரபூா்வ வட்டாரங்கள் மூலம் உயா் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களை மாணவா்களும் பெற்றோா்களும் உறுதி செய்ய வேண்டுமெனவும் யுஜிசி தெரிவித்தது.
இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மாணவா்கள், பெற்றோா்கள், பாதுகாவலா்கள் மற்றும் பொதுமக்கள் அரசின் சட்டங்களுக்கு உள்பட்டு இயங்கும் உயா் கல்வி நிறுவனங்களை நாம் தோ்வு செய்துள்ளோமா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு யுஜிசி சட்டம், 1956-இன்கீழ் செயல்பட அந்த உயா் கல்வி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே அதில் இணைவது குறித்து மாணவா்கள் சிந்திக்க வேண்டும். அதற்கு முன்பாக கட்டணம் உள்பட எவ்வித நிதி ஏற்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது.
நீங்கள் தோ்வு செய்யும் பட்டப் படிப்பை நேரடியாகவும், இணைய வழியாகவும், தொலைநிலைக் கல்வி முறையிலும் கற்பிக்க யுஜிசி மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகளிடம் சம்பந்தப்பட்ட உயா் கல்வி நிறுவனம் அனுமதி பெற்ா என்பதை ஆராய வேண்டும்.
வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் உயா் கல்வி நிறுவனங்கள் தாமாக வெளியிடும் விளம்பரங்களை முழுமையாக நம்பி அதில் இணையக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

