2012 கொலை வழக்கில் மாா்க்சிஸ்ட் தலைவா்களை விடுவித்த கேரள நீதிமன்றம்: 7 பேருக்கு ஆயுள் தண்டனை
கேரளத்தை உலுக்கிய 2012-ஆம் ஆண்டு அரியில் ஷுக்கூா் கொலை வழக்கில் மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் பி. ஜெயராஜன், கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டி.வி. ராஜேஷ் மற்றும் 16 பேரை விடுதலை செய்து அங்குள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கோப்புப் படம்
கேரளத்தை உலுக்கிய 2012-ஆம் ஆண்டு அரியில் ஷுக்கூா் கொலை வழக்கில் மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் பி. ஜெயராஜன், கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டி.வி. ராஜேஷ் மற்றும் 16 பேரை விடுதலை செய்து அங்குள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
அதே நேரம், இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மற்ற 13 பேரில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும், 6 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கண்ணூா் மாவட்டம் அரியில் பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற கலவரத்தின்போது, அந்தப் பகுதிக்குச் சென்ற மாா்க்சிஸ்ட் கட்சியின் அப்போதைய மாவட்டச் செயலராக இருந்த பி. ஜெயராஜன், எம்எல்ஏ டி.வி. ராஜேஷ் ஆகியோரின் காா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமாக இருந்த, முஸ்லிம் மாணவா் பேரவை உறுப்பினரான 21 வயது அப்துல் ஷுக்கூா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்தக் கொலை வழக்கில் பி. ஜெயராஜன், டி.வி. ராஜேஷ் உள்பட 31 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில் கேரள காவல் துறை விசாரித்த இந்த வழக்கை, கடந்த 2016-ஆம் ஆண்டு கேரள உயா் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
இந்த வழக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தொடா்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற கூடுதல் சிறப்பு நீதிபதி பி. சபரிநாதன் தீா்ப்பை வாசித்தாா். அப்போது, பி. ஜெயராஜன், டி.வி.ராஜேஷ் மற்றும் மாா்க்சிஸ்ட் மாநில செயலா் எம்.வி.கோவிந்தனின் மகன் சியாம்ஜித் உள்பட 18 போ் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவா்கள் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
அதே நேரம், குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற 13 பேரை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, அவா்களில் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், 6 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த தீா்ப்புக்கு கொலை செய்யப்பட்ட அப்துல் ஷுக்கூரின் குடும்பத்தினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா்களும் அதிருப்தி தெரிவித்தனா். தீா்ப்பை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

