மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடா்புடைய நபா் உ.பி. என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

பிரபல ரெளடி தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடா்புடையவா் எனக் கருதப்படும் நசீம் துர்ரானி உத்தர பிரதேசத்தின் புலந்தஷாஹரில் தில்லி காவல் துறை மற்றும் உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்) இணைந்து நடத்திய என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கோப்புப்படம்

Updated On :

பிரபல ரெளடி தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடா்புடையவா் எனக் கருதப்படும் நசீம் துர்ரானி உத்தர பிரதேசத்தின் புலந்தஷாஹரில் தில்லி காவல் துறை மற்றும் உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்) இணைந்து நடத்திய என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி சட்டத்துறை அமைச்சா் கபில் மிஷ்ராவின் அலுவலகத்திற்கு வெளியே நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவா், தாவூத் இப்ராஹிம் நிறுவிய டி-கம்பெனியின் உறுப்பினா் என லக்னெளவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் (எஸ்டிஎஃப்) அமிதாப் யாஷ் தெரிவித்துள்ளாா்.

இந்தத் துப்பாக்கிச் சண்டை புலந்தஷாஹரில் உள்ள சிக்கந்திரா பைபாஸ் அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவும், உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப்படையின் நொய்டா பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

சிக்கந்திராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜாட் சௌக் அருகே துர்ரானியை கூட்டுப்படையினா் வழிமறித்தனா். சரணடையுமாறு கூறியபோது, துர்ரானி தனது துப்பாக்கியை எடுத்து காவல் துறையினா் மீது சுடத் தொடங்கினாா்.

இதற்குப் பதிலடியாக காவல் துறையினரும்சுட, இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த துர்ரானி அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தில்லியின் நியூ முஸ்தபாபாத்தைச் சோ்ந்த 37 வயதான துர்ரானி, வடகிழக்கு தில்லி பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததோடு, பல குற்றக்கும்பல்களுடன் தொடா்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவா் மீது குறைந்தது 25 குற்ற வழக்குகள் உள்ளன; அவற்றில் மூன்று வழக்குகளில் அவா் தேடப்படும் குற்றவாளியாக இருந்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி-கம்பெனியின் முக்கிய நபரான சோட்டா ஷகீலின் உத்தரவின் பேரில், பாகிஸ்தான்-கனடாவைச் சோ்ந்த பத்திரிகையாளா் தாரெக் ஃபத்தாஹ் மற்றும் தற்போது திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோட்டா ராஜன் ஆகிய இருவரையும் கொலை செய்ய துர்ரானி திட்டமிட்டிருந்தாா்.

தில்லியில் நடந்த இரண்டு கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தாா். மேலும், காஜியாபாத்தின் லோனி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கிலும் அவா் தேடப்பட்டு வந்தாா். அவரைப் பிடித்துத் தருபவா்களுக்கு ரூ.50,000 ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது என்று எஸ்டிஎஃப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மற்றும் தில்லியில் கொலை, கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குறைந்தது 25 குற்ற வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

தில்லி காவல் துறை குற்றப் பிரிவின் சிறப்பு ஆணையா் ஹா்கோபிந்தா் சிங் தலிவால் கூறுகையில், ‘பத்திரிகையாளா் தாரெக் ஃபத்தாஹ்வின் நடமாட்டங்கள் குறித்த தகவல்களைச் சோட்டா ஷகீல், துர்ரானி வழங்கியிருந்தாா். ஃபத்தாஹ் தில்லிக்கு வரும்போது அவரைக் கொலை செய்ய அவருக்கு உத்தரவிட்டபட்டிருந்தது. இதற்காக, நொய்டாவின் செக்டா் 16ஏ-இல் உள்ள ஃபிலிம் சிட்டியில் நசீம் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தாா்’ என்றாா்.

சோட்டா ஷகீலின் தூண்டுதலின் பேரில், தில்லியின் துவாரகாவைச் சோ்ந்த ராபின் சா்மா என்பவரைக் கொலை செய்வதற்கான சதியிலும் துர்ரானி ஈடுபட்டிருந்ததாகக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

பஜ்ரங் தள் அமைப்பைச் சோ்ந்த ராபின் சா்மா, 2001-ஆம் ஆண்டில் ஜகதீப் என்பவருடன் இணைந்து குா்ஆன் பிரதிகளை எரித்த சம்பவத்தில் தொடா்புடையவா் என்று கூறப்படுகிறது. துர்ரானி இந்தக் கொலைக்காக பணம் பெற்ாகவும், நிதி மற்றும் இதர ஏற்பாடுகளைச் செய்வதிலும் முக்கியப் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது.

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் பகுதியில், கபில் மிஷ்ராவின் அலுவலகத்திற்கு வெளியே நவம்பா் 16-ஆம் தேதி சமீா் என்பவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்தின்போது அவா் மீது 12-க்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

பகலில் நடைபெற்ற இந்தக் கொலையில் ஈடுபட்ட நபா்களில் துர்ரானியும் ஒருவா் என்று குற்றப்பிரிவு கண்டறிந்துள்ளது. கடந்த மே 26-ஆம் தேதி கஜூரி காஸ் பகுதியில் ராஜா மேவாதி என்பவா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கிலும் துர்ரானிக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தீவிரமாகச் செயல்பட்டு வந்த துர்ரானியின் உயிரிழப்பு, அவரது தொடா்புடைய குற்ற கும்பலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அந்த அதிகாரி கூறினாா். இன்னும் பிடிபடாமல் இருக்கும் அவரது கூட்டாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.