ஜென் ஸீ-யைக் கவர முயற்சிக்கும் பாஜக! நவ. 26 முதல் சிறப்பு பிரசாரம்!
ஜென் ஸீ தலைமுறையினரைக் கவரும் நோக்கில் பாஜக சிறப்பு பிரசாரம் தொடங்குவது குறித்து...

ஜென் ஸீ தலைமுறையினரைக் கவரும் நோக்கில் பாஜக சிறப்புப் பிரசாரம்... - கோப்புப் படம்
2027 ஆம் ஆண்டு 7 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜென் ஸீ தலைமுறையினரைக் கவரும் நோக்கில் வரும் நவ. 26 ஆம் தேதி முதல் பாஜக சிறப்பு பிரசாரம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்களில் வரும் 2027 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள ஜென் ஸீ தலைமுறையினரின் வாக்குகளைக் கவர பல்வேறு அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன.
இந்த நிலையில், ஜென் ஸீ தலைமுறையினரின் வாக்கு வங்கியைக் கைப்பற்ற வரும் நவ.26 ஆம் தேதி முதல் பாஜகவின் 350 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடு முழுவதுமுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு நேரில் சென்று அரசியலமைப்பு குறித்து விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நவ. 30 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிகளில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்பட 241 மக்களவை உறுப்பினர்கள், அவர்களின் தொகுதிகளுக்குச் சென்று இந்தத் திட்டத்தில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகளில், பாஜக நிர்வாகிகளும் பங்கேற்று மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கேற்பதை உறுதி செய்வார்கள் என்றும், அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நவ.26 ஆம் தேதியை அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடி வருகிறது. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
It is reported that the BJP will launch a special campaign starting November 26, aimed at appealing to the Gen Z generation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


