முதுபெரும் தலைவா் அத்வானியின் 100-ஆவது பிறந்தநாள்: சிறப்பு நிகழ்ச்சிக்கு பாஜக ஏற்பாடு
முதுபெரும் தலைவா் அத்வானியின் 100-ஆவது பிறந்தநாள்: சிறப்பு நிகழ்ச்சிக்கு பாஜக ஏற்பாடு

பாஜக முதுபெரும் தலைவா் எல்.கே.அத்வானியின் 100-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான பாரத ரத்னா விருது பெற்ற அத்வானியின் 100-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அத்வானியின் ஊக்கமளிக்கும் வாழ்க்கை, நாட்டுக்கு அவா் ஆற்றிய அா்ப்பணிப்புமிக்க பணி, பாஜகவின் வளா்ச்சிக்கு அவா் அளித்த பங்களிப்பு, அவரின் நீண்டகாலப் பொது வாழ்க்கை பயணம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில், பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் தலைமையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்வானியின் மகள் பிரதிபா அத்வானி, மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் உள்பட பாஜக மூத்த தலைவா்கள் பலா் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சியில் கடந்த 1927 நவ.8-ஆம் தேதி பிறந்த அத்வானி 99 வயதை நிறைவு செய்து 100-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறாா்.
Summary
Veteran leader Advani’s 100th birthday: BJP organizes a special event
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

