காலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

ஜென் ஸீக்களின் முகம் நேஹா போரா! ஒப்புக்கொண்ட அபிஜீத் தீப்கே!

ஜென் ஸீ தலைமுறையின் முகமாக நேஹா போரா இருப்பதை ஒப்புக்கொள்வதாக அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளது குறித்து...

Neha Bora  Abhijeet Dipke agreed

அபிஜீத் தீப்கே / நேஹா போரா - எக்ஸ்

Published On :

ஜென் ஸீ தலைமுறையின் முகமாக அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா இருப்பதை ஒப்புக்கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (அக். 4) தெரிவித்தார்.

சமூக வலைதளப் பக்கத்தில் அபிஜீத் தீப்கேவை விட சிறந்த செயல்பாட்டாளர் நேஹா போரா எனப் பதிவிட்டதற்கு, அதை ஒப்புக்கொள்வதாகக் அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி அகில இந்திய மாணவர் சங்கத்தினர் தில்லி ஜந்தர் மந்தரில் உள்ள அசோகா சாலையில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுப்புகளை அமைத்தும் தடியடி நடத்தியும் கலைத்தனர். இப்போராட்டத்தில் மாணவர்களை நேஹா போரா வழிநடத்திச் சென்றிருந்தார். அவரை காவல் துறையினர் தடுத்து தடுப்புக் காவலில் எடுத்துச் சென்றனர்.

இதேபோன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இளைஞர்களை திரட்டி மும்பை சிவாஜி பூங்காவில் அபிஜீத் தீப்கே போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட இளைஞர்கள் மாணவர்கள் பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தின் முடிவில் அனுமதியின்றி போராட்டத்திற்கு கூட்டத்தைக் கூட்டியதாக அபிஜீத் தீப்கே, செய்தித் தொடர்பாளர்கள் அசுதோஷ் ரானா, செளரவ் தாஸ், ரத்னா சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூகவலைதளப் பக்கத்தில் பயனர் ஒருவர், நேஹா போராவை கைது செய்து அழைத்துச் செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு, அபிஜீத் தீப்கேவை விட சிறந்த செயல்பாட்டாளர் நேஹா போரா என்பதை உணர்வதே முதிர்ச்சி. முழுமையான ஆளுமை கொண்ட ஜென் ஸீ முகமாக நேஹா இருக்கிறார் எனப் பதிவிட்டுள்ளார்.

அவரின் இப்பதிவை மறுபதிவு செய்து, இதனை ஒப்புக்கொள்கிறேன் என அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளார்.

Summary

AISA Neha Bora is complete Gen Z icon with an absolutely ridiculous aura Abhijeet Dipke agreed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER