காலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

விமானி ஸ்மித் மச்சாரை ராகுல் பாராட்டாதது ஏன்? வாக்கு வங்கிதான் காரணமா?

விமானி ஸ்மித் மச்சாரை காங்கிரஸார் விமர்சிக்கவில்லை என பாஜக கேள்வி எழுப்பியது குறித்து...

Rahul Gandhi

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :

வாக்கு வங்கிக்காக விமானி ஸ்மித் மச்சாரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாராட்டவில்லை என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

நடுவானில் தாக்குதலுக்குள்ளானபோதிலும் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருக்கு இந்தியாவில் மட்டுமின்றி, உலக தலைவர்கள் பலரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது, "நடுவானில் பயணித்த விமானத்தில் பலத்த காயமடைந்தபோதிலும் 174 பேருடன் சென்ற விமானத்தை வீழ்த்துவதற்காக நடந்ததாகக் கூறப்படும் முயற்சியை விமானி ஸ்மித் மச்சார் முறியடித்தார்.

இந்தியா பெருமைப்பட வேண்டிய இந்தத் தருணம், அவமானப்பட வேண்டியதாகவும் உள்ளது. விமானி ஸ்மித் மச்சாருக்காக காங்கிரஸ் குடும்பத்தாரிடம் இருந்து ஒரு வார்த்தையோ சமூக ஊடகங்களில் அறிக்கைகூட வரவில்லை.

இஸ்ரேல் போரில் காஸாவுக்காக வருத்தம் தெரிவித்த சோனியா காந்தியின் குடும்பத்தார். தற்போது வாக்கு வங்கிக்காக ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டிப் பேச முடியாமல் தவிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு புதன்கிழமை (செப். 30) காலை 174 பயணிளுடன் சென்ற விமானத்தில் சக விமானி ஒருவர், இந்திய விமானி ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தினார்.

கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், தாக்குதலுக்குள்ளான விமானி, சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார்.

Summary

BJP attacks Congress over silence on pilot Smit Machchhar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.