தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்!

தங்கம் வாங்குவது தொடர்பாக பிரதமர் மோடி பேசியது பற்றி...

பிரதமர் மோடி

Updated On :

தங்கம் வாங்குவதைத் தள்ளி வைக்கவேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றியிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

இந்திய மக்கள் தங்கம் வாங்குவதை ஒத்தி வைக்கவேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தங்கம் விலை பெரியளவில் சரிவடைந்து வௌம் நிலையில் பிரதமர் மோடியின் முந்தைய அறிவுரைக்கு நன்றி தெரிவித்து, வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (சிடிஐ) கடிதம் எழுதியுள்ளது.

ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ.1.90 கோடியிலிருந்து ரூ.1.25 கோடியாக, ரூ.65 லட்சம் வரை சரிந்ததால், பிரதமரின் ஆலோசனை மூலம் லட்சக்கணக்கான நகை வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் இழப்புகளிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், “இந்திய மக்கள் தங்கம் வாங்குவதைத் தள்ளிவைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தபோது காங்கிரஸ் கட்சியினர் அதனை மரண சாசனம் என வர்ணித்தனர்.

தற்போது உலகளவில் தங்கத்தின் விலை சரிந்துள்ள நிலையில், பிரதமரின் ஆலோசனையைப் பின்பற்றிய வணிகர்கள் ஒரு கிலோ தங்கத்திற்கு ரூ. 65 லட்சம் வரை சேமித்துள்ளனர்.

இதற்காக வணிகர் அமைப்புகள் பிரதமருக்கு இன்று நன்றி தெரிவித்துள்ளனர்.

வணிகர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

பெரும்பான்மை இந்திய மக்கள் ஏழ்மை நிலையில் இருக்கையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த காந்தி - வதரா குடும்பத்தினர், பிரதமர் மோடியிடமிருந்து பொருளாதார வாழ்க்கை மற்றும் எளிய வாழ்க்கை முறை தொடர்பான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Gold price decline; PM Modi saved traders from losses: BJP expresses pride!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.