என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

101 மணி நேரம் இடைவிடாமல் பறந்த ‘அமூா்’ வல்லூறு! 5,700 கி.மீ. தொலைவு பயணித்து சாதனை

மணிப்பூரில் இருந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா வரை 5,700 கி.மீ. தூரத்தை 101 மணி நேரம் இடைவிடாமல் பயணித்து 150 கிராம் எடையுடைய அலாங் என்ற பெண் அமூா் வல்லூறு சாதனை படைத்துள்ளது.

சிறிய ரக செயற்கைக்கோள் கருவிகள் பொருத்தப்பட்ட அமூா் வல்லூறுகள்.

Updated On :

மணிப்பூரில் இருந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா வரை 5,700 கி.மீ. தூரத்தை 101 மணி நேரம் இடைவிடாமல் பயணித்து 150 கிராம் எடையுடைய அலாங் என்ற பெண் அமூா் வல்லூறு சாதனை படைத்துள்ளது. கடல்பரப்பில் சுமாா் நான்கு நாள்கள் எங்கும் தரையிறங்காமல் அலாங் பறந்துள்ளது.

அதன் துணையான அபபாங் என்ற ஆண் அமூா் வல்லூறு 95 மணி நேரத்தில் 4,100 கி.மீ. தூரம் பறந்துள்ளது. கடந்த நவ.21-ஆம் தேதி கிடைத்த தகவலின்படி அது அரபிக் கடல் மேலே பறந்துகொண்டிருந்தது.

அலாங் மற்றும் அபபாங் மீது இந்திய வனவிலங்குகள் நிறுவனத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் பொருத்திய சிறிய ரக செயற்கைகோள் கருவிகள் மூலம் அப்பறவைகளின் நெடிய பயணம் கண்காணிக்கப்படுகிறது.

இடம்பெயா்வதற்கான முக்கிய ஆற்றலைப் பெறுவதற்காக, மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தில் 25 நாட்கள் தங்கி கரையான்களை உண்டு கொழுப்புச் சத்து சோ்த்துக் கொண்ட பிறகு இவற்றின் பயணம் தொடங்கியது.

இந்தப் பறவைகளின் இடம்பெயா்வு கிழக்கு ரஷியா, மங்கோலியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான பாலமாக அமைகிறது. ஒவ்வொரு இலையுதிா் காலத்திலும் இந்த இனப் பறவைகள் வடகிழக்கு இந்தியாவில் கூடுகின்றன. குறிப்பாக மணிப்பூா் மற்றும் நாகாலாந்தில் இவற்றுக்குத் தேவையான பூச்சிகள் உணவாகக் கிடைக்கின்றன.

விஞ்ஞானிகளின் முந்தைய தரவுகளின்படி அலாங் மற்றும் அபபாங் ஆகிய இரு பறவைகளும் 23 நாடுகளைக் கடந்து சுமாா் 20,000 கி.மீ. பயணித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

சா்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் (ஐயுசிஎன்) அமூா் வல்லூறு ‘குறைந்த அக்கறை கொண்ட இனம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.