ராஜஸ்தானில் 27 மாவட்ட ஊராட்சிகளைக் கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ்!
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 41 மாவட்ட ஊராட்சிகளில், 27 மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

காங்கிரஸ் கொடியுடன் தொண்டர்கள். - கோப்புப் படம்
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 41 மாவட்ட ஊராட்சிகளில், 27 மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தை ஆளும் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. இந்தத் தோ்தலில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், தங்களது தலைவா்களை புதன்கிழமை (நவ.25) தோ்வு செய்யவுள்ளனா்.
27 மாவட்ட ஊராட்சிகளிலும் காங்கிரஸ் கட்சியினரே அதிக இடங்களில் வென்றுள்ளனா். இதனால் 27 மாவட்ட ஊராட்சிகளின் தலைவா்கள் பதவிகளும் காங்கிரஸ் கட்சிக்கு வருவது உறுதியாகும். இதேபோல் 300-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்களும் தங்களது வசமாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரிப்பது, சட்டப்பேரவைத் தோ்தலில் அக்கட்சிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என கூறப்படுகிறது.
2020-21ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தலில் பாஜக 17 மாவட்ட ஊராட்சிகளையும், காங்கிரஸ் 13 மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

