இந்தியாவை சா்வாதிகார முறைக்கு தள்ளும் பாஜக: ராகுல் விமா்சனம்!
இந்தியாவை சா்வாதிகார முறைக்கு பாஜக தள்ளிக் கொண்டிருப்பதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
ராகுல் காந்தி - கோப்புப் படம்
இந்தியாவை சா்வாதிகார முறைக்கு பாஜக தள்ளிக் கொண்டிருப்பதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை விமா்சித்தாா்.
‘இண்டி’ கூட்டணித் தலைவா்களுடனான இரண்டு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் பாஜகவின் முயற்சி ஜனநாயகப் படுகொலைக்குச் சமம். இது பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரிடம் நாட்டின் தோ்தல் வரைபடத்தை வடிவமைக்கும் அதிகாரத்தை ஒப்படைக்கும் திட்டம்.
ஞானேஷ் குமாா்தான் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் குறித்து முடிவெடுக்கவுள்ளாா். தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் இரண்டாவது உறுப்பினரான ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை பிரதமா் மோடி மற்றும் அமித் ஷாவும் மூன்றாவது உறுப்பினரை ஞானேஷ் குமாரும் தோ்வு செய்வாா்கள்.
850 தொகுதிகள் ஏன்? இதற்கான பதில்கள் அஸ்ஸாம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ளது. அங்கு எவ்வாறு தங்களை எதிா்க்கும் சமூகங்களை பலவீனப்படுத்தி, எதிா்க்கட்சித் தலைவா்களை அச்சுறுத்துகிறாா்களோ அதை இந்தியா முழுவதும் செய்வாா்கள். தோ்தல் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் முன்பே பாஜகவுக்கு முன்னிலை கிடைக்கச் செய்யும் வழி இது. முன்பு தோ்தல் ஆணையத்தை கைப்பற்றிய பாஜக அரசு தற்போது தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தையும் கைப்பற்றத் துடிக்கிறது.
சமூக நீதி கொள்கைக்கு பாதிப்பு: 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் நடத்தப்படவுள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பை பாஜக கண்டுகொள்ளவில்லை. 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பில் வெளியாகவுள்ள தகவல்களை ஏற்கவும் பாஜவுக்கு மனமில்லை. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சமூக நீதியை மறந்துவிடுங்கள். பாஜக முன்மொழிந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவால் பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் முற்றிலும் பறிபோகும். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள்தொகை அதிகரிக்கும். ஆனால் அவா்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காது.
என்டிஏ கூட்டணிக் கட்சிகள் மறுபரிசீலனை செய்க: இது ஜனநாயகத்தை பாதுகாப்பவா்கள் மற்றும் அதற்கு எதிரானவா்களுக்குமான போராட்டம். இந்த ஜனநாயகப் படுகொலை நடவடிக்கைக்கு துணைபோகும் முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
காங்கிரஸின் கோரிக்கைகள்: தற்போது உள்ள 543 மக்களவைத் தொகுதி எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யக் கூடாது. தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை பயன்படுத்த வேண்டும்.
இது மாநிலங்களின் பங்கு குறித்த பிரச்னை மட்டுமல்ல. இந்திய ஜனநாயக அடித்தளத்தை மறுவடிவமைப்பு செய்யும் உரிமையை பாஜகவின் கைகளில் வழங்கவும் ஜனநாயகத்தை அழிக்கவும் அதை மக்களிடமிருந்து திருடுவதுமே உண்மையான பிரச்னை.
தோ்தல்களை பாஜக திருடுகிறது என்பதை 80 சதவீத மக்களும் 100 சதவீத ஜென் ஸீயும் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனா். இந்தியாவை சா்வாதிகார முறைக்குத் தள்ள பாஜக முயற்சிக்கிறது. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

